சிதம்பரம் கோயிலில் குழந்தை திருமணங்கள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published Apr 17, 2024, 5:21 PM IST

சிதம்பரம் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்து வைப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து வைப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே சிதம்பரம் கோவிலில் குழந்தை திருமணங்களை தடுக்க நிரந்தர குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார்.

Latest Videos

undefined

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதிலும் குழந்தை திருமணங்களை கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கும் சமூக நல அதிகாரி அடங்கிய குழு ஏற்கனவே இருக்கிறது. அவ்வாறு ஒரு அதிகாரி இருக்கும் போது கூடுதலாக எதிர்க்கு நிரந்தர கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.

ரூ.300 கோடி மோசடி: கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது!

அத்துடன், மாவட்டந்தோறும் இருக்கக்கூடிய சமூகநல அதிகாரிகள் குழந்தை திருமணம் தொடர்பான புகார் மீது உடனே கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!