Kalaingar Karunanidhi Memorial : மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம் தற்பொழுது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. அது குறித்த நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ளது.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தற்பொழுது அங்கே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தனது 95வது வயதில் கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார். சில போராட்டங்களுக்குப் பிறகு அவருடைய உடல் அண்ணாவின் நினைவிடத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கலைஞர் ஆகிய இருவருடைய நினைவிடங்களும் சுமார் 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றது.
இந்த நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் இன்று ஜனவரி 26 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தற்போது திறந்து வைத்துள்ளார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள், அதனுடைய கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், திமுக தொண்டர்களும் தற்பொழுது சென்னை கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் ஆந்திரா அரசின் நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம்