2022ஆம் ஆண்டு பாஜகவின் வரலாற்று சரித்திரத்தை மாற்றி 30 வயதில் ஒரு மாநிலத்தின் செயலாளராக இவர் பொறுப்பேற்ற போது யார் இந்த எஸ்.ஜி. சூர்யா என திரும்பிப் பார்த்தவர்கள் ஏராளம். இந்த நிலைமைக்கு அவர் பட்ட கஷ்டங்கள், தியாகங்கள் எனக்கு நன்கு தெரியும். பா.ஜ.க விற்காகவே பிறந்தவர் எஸ்.ஜி.சூர்யா.
ஒரு முப்பது வயது இளைஞன் சவால் அரசியல் செய்வது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியமான ஒன்று, அதை நிஜத்தில் செய்து காட்டியவர் எஸ்.ஜி சூர்யா என பாஜக ஐடி விங் மாநிலச் செயலாளர் புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக ஐடி விங் மாநிலச் செயலாளர் பிரதீப் எக்ஸ் தளத்தில்: தமிழக பாஜக மாநில செயலாளராக என்னுடைய அருமை நண்பர் எஸ்.ஜி. சூர்யா பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அவருடைய செயல்பாடுகள் உண்மையில் வியப்படைய செய்கிறது. 2022ஆம் ஆண்டு பாஜகவின் வரலாற்று சரித்திரத்தை மாற்றி 30 வயதில் ஒரு மாநிலத்தின் செயலாளராக இவர் பொறுப்பேற்ற போது யார் இந்த எஸ்.ஜி. சூர்யா என திரும்பிப் பார்த்தவர்கள் ஏராளம். இந்த நிலைமைக்கு அவர் பட்ட கஷ்டங்கள், தியாகங்கள் எனக்கு நன்கு தெரியும். பா.ஜ.க விற்காகவே பிறந்தவர் எஸ்.ஜி.சூர்யா.
இதையும் படிங்க: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! கடைசி 15 இடங்களில் 12 வட மாவட்டங்கள்! காரணம் என்ன? ராமதாஸ் சொன்ன தகவல்!
1980 ஆம் ஆண்டு பாஜகவை தோற்றுவித்தவர்களில் ஒருவரான திருக்கோவிலூர் சுந்தரம் ஐயா அவர்களின் பேரன் என்பது ஒரு புறம் இருந்தாலும் தனது ஏழாம் வயதில் இருந்து ஆர்எஸ்எஸ் சுயம் சேவகராக மெருகேற்றிக் கொண்டு இளைஞர் அணி, சமூக ஊடகப்பிரிவு, மாநில செய்தி தொடர்பாளர், என்று படிப்படியாக தன் முழு திறமை மற்றும் தனது கட்சிப் பணிகள் மூலம் இந்த இடத்தை அடைந்தார் என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு முப்பது வயது இளைஞன் சவால் அரசியல் செய்வது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியமான ஒன்று, அதை நிஜத்தில் செய்து காட்டியவர் எஸ்.ஜி சூர்யா.
என்னதான் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியை மையப்படுத்தி இவரது அரசியல் இருந்தாலும் தமிழகம் முழுக்க இவரது பேச்சுக்களும் புள்ளி விவரங்களுடன் இவர் எடுத்துரைக்கும் வாதங்களும் சென்றடைந்துள்ளது என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா களத்தில் அதைவிட இரண்டு மடங்கு வேகம் என்றே சொல்லலாம்.
இவருடைய நமோ வாசவி பவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இவர் செய்து வரும் சேவைகளால் பல்லாயிரக்கணக்கான பேர் பயனடைந்துள்ளனர் நமோ மீல் NaMo Meal திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு ஒரு வேளை வயிறார உணவளிக்கும் திட்டம், நமோ குருகுலம் NaMo Gurukulam மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வியறிவு பெற உதவி வருகிறார். கற்க கசடற என்ற திட்டத்தின் கீழ் பல குழந்தைகளுக்கு படிக்க உதவியுள்ளார்.
சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது அரசாங்க நிர்வாகிகளால் சென்று சேர முடியாத பல இடங்களுக்கு கூட இவரும், குழுக்களும் சென்று நிவாரண உதவிகள் செய்தது பல வகையில் பாராட்டுக்குள்ளானது பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் இவர் எடுத்து வைக்கும் கருத்துக்கள் மிகப்பெரிய தாக்கத்தை பொதுமக்கள் மத்தியிலும் ஆளுகின்ற திமுக அரசுக்கு பயத்தையும் விளைவித்தது. இதன் காரணமாக 2023 ஆம் ஆண்டு துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாகவும் ஆளுகின்ற திமுக அரசுக்கு எதிராகவும் இவர் பேசிய விஷயத்தைத் திரித்து இவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இவருடைய கைதுக்கு தமிழக பாஜக, மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல கண்டனங்கள் எழுந்தது பாஜகவில் இவருடைய ஆளுமையை பறைசாற்றியது.
பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஊடகங்களிடம் சூர்யாவின் கைதுக்கு பிரத்தியேகமாக கண்டனம் தெரிவித்தது அதிலும் ஹைலைட். ஆங்கில செய்தி ஊடகங்களான CNN, BBC, INDIA TODAY, ANI, TIMES NOW, REBUBLIC TVபோன்றவைகளில் இவரது கைது விவாத பொருளாக மாறியது. இதை சற்றும் எதிர்பாராத தமிழக அரசு தவறான நபர் மீது கை வைத்து விட்டோமோ என்ற எண்ணத்துடன் பின் வாங்கியது என்றே கூறலாம்.
இதையும் படிங்க: மாநில அரசின் அலட்சியத்தால் பட்டாசு ஆலை மரணங்கள்: தமிழக பாஜக கண்டனம்!
இவர் எட்ட வேண்டிய உயரம் இன்னும் இருக்கிறது. இவருடைய கற்க கசடற, NaMo Meal, NaMo Gurukulam போன்ற முன்னெடுப்புகளில் நானும் சிறிய பங்கு வகித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இவரிடமிருந்து கற்று கொண்டது ஏறாளம் என பிரதீப் கூறியிருந்தார். இதை டேக் செய்து எஸ்.ஜி சூர்யா எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.