DMK Slams EPS : குடியுரிமை திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம் போன்ற பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிச்சாமியை மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்று திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட தகவலில் "எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம் அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா? பதவி சுகத்தை அனுபவித்தார், ஆனால் தமிழர்களுக்கு பாதகங்கள் பல செய்தார்".
"எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல் தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு அவர்கள் கொடுமைக்கு ஆளானார்கள்".
ஷாக்கிங் நியூஸ்.. நாமக்கல் வாகன சோதனையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ 2.83 கோடி.. யாருடையது தெரியுமா?
"அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள் அந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றார்கள். ஒரு தந்தை கண்ணெதிரே அவர் மகன் சுட்டு கொல்லப்பட்டான்".
"இந்த காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள், ஆனால் இந்த கொடுமைகளை குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பொழுது, தொலைக்காட்சியில் பார்த்து தான் நானும் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படி கூறியது நியாயமா?"
"அந்த கொடியே துப்பாக்கிச் சூடு பற்றி விசாரணை செய்த ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா அவர்கள் தலைமையிலான ஆணையம், அந்த சம்பவம் குறித்து ஏற்கனவே அவருக்கு தெரியும் என்று கூறி பழனிசாமியின் பொய் முகத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது."
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள்
"பொள்ளாச்சியில் அன்றைய ஆளு கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்கள், 200-க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி கற்பழித்து, கொடுமைகளுக்கு ஆளாக்கினர். இதற்காக மகளிர் சங்கங்கள் போராடின, பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளை பாதுகாத்தவர் பழனிசாமி".
நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி
"அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும், மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்கு காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தார். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர் பழனிசாமி தான்".
உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமி தான்
உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மையில்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து வங்கியில் வாங்கிய கடனை செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இந்த திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த உடன் உதய் மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால் மின்வாரியத்தின் கடன் 40,000 கோடியாய் தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமையை தமிழ்நாடு அரசு மேல் விழுந்தது என்று பல குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்துள்ளது.