அலெர்ட்.. "தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு" 'ஷாக்' கொடுத்த அமைச்சர் மா.சு

By Raghupati RFirst Published Jun 8, 2022, 3:24 PM IST
Highlights

Tamilnadu Corona : தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘இந்தியாவில் குறிப்பாக மஹாராஷ்டிரா, மும்பை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா ஏறுமுகமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி மிகக்குறைவாக நாள் ஒன்றிற்கு 22 என பதிவானது. தற்போது படிப்படியாக ஏறிக்கொண்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாகிறது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை மற்றும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் பெரிய நகரங்களை தற்போது பல்வேறு இடங்களில் தினசரி ஒன்று இரண்டு பாதிப்புகள் என பதினேழு மாவட்டங்களில் நேற்றையதினம் பதிவாகின. அதன்படி இந்த பயிற்சி மையத்தில் வெளிமாநிலங்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் பயிற்சி பெறுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிமாநில பயணம் செய்வதால் இங்கு 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, ஒருவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தனிமைப்படுத்தப்பட்ட 16 பேருக்கும் லேசான அறிகுறிகள் தான் இருந்தது. இது ஆறுதல் அளிக்க கூடிய வகையில் உள்ளது. தற்போது உலகளவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒமிக்ரான் உள்வகை தான் லேசாக உள்ளது. இதில் BA 1 2 3 அதிகமாக இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பிஏ2 தான் இருந்து வந்தது. இது தவிர ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி மையங்களில் ஆய்வு செய்த போதும் எல்லோருக்கும் லேசான அறிகுறிகள் தான் இருந்து வருகிறது. தொண்டை கரகரப்பு லேசான காய்ச்சலுடன் சரியாகி வருகின்றனர். 

பொதுமக்கள் இந்த நேரத்தில் கொரோனா முடிந்து விட்டது, இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும்.  அதனை தலைதூக்காமல் இருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது’ என்று கூறினார்.பிறகு பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக துவங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

தமிழகத்தைப் பொருத்தவரை 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது. இதற்கு முன்னால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பெரிதளவிலான பாதிப்பு இருந்த நிலைமாறி 17 மாவட்டங்களில் ஒன்றிரண்டு என 150 வரை வந்துள்ளது. இதைத் தடுப்பதற்கு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதார செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதார். அதில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்' என்றார்.

இதையும் படிங்க : ”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!

இதையும் படிங்க : G Square : ஜி ஸ்கொயர் விவகாரத்தில் இதுதான் நடந்தது.. உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் முத்துசாமி !

click me!