அதிமுக ஓட்டை இழுக்க பிளான் போட்ட பாஜக.!ஜெயலலிதா,எம்ஜிஆர் சமாதிக்கு நேரில் சென்று ஆசி பெற்ற பாஜக வேட்பாளர்

By Ajmal Khan  |  First Published Apr 17, 2024, 3:41 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், அதிமுகவின் வாக்குகளை கவரும் வகையில், பாஜக மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்றனர்.  
 


ஜெயலலிதா நினைவிடத்தில் பாஜக வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இன்று காலை முதல் கொளுத்தும் வெயிலிலும் திமுக,அதிமுக, பாஜக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்கள் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய சென்னையில் பாஜக  சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் செல்வம் இன்று காலை திடீரென சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அதிமுக நிறுவனர் எம் ஜி ஆர் மற்றும்  ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார்.

Tap to resize

Latest Videos

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவிற்கு 10 ஓட்டுகள் கூட விழாது... தேர்தலில் நாடகம் போடும் எடப்பாடி- உதயநிதி

அதிமுக- பாஜக மோதல்

பாஜக நிர்வாகிகளோடு ஊர்வலமாக சென்ற அவர், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர்  சமாதிக்கும் சென்ற அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய வினோஜ் செல்வம் நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஆசி பெற்றதாக கூறினார்.  இதனிடையே தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுடன் பாஜக கூட்டணியை தொடர்ந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணா தொடர்பாக அண்ணாமலை விமர்சித்து பேசியதால் உறவு முறிந்தது. 

அதிமுக ஓட்டை கவர திட்டம்

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக எதிரணியில் போட்டி போட்டு வரும் நிலையில் அதிமுகவின் வாக்குகளை கவர்வதற்காகவே பாஜக வேட்பாளர் வினோத் செல்வம் அதிமுக மறைந்த தலைவர்கள் நினைவிடத்திற்கு  சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜகவில் தலைவர்களால் ஓட்டு பெற முடியாது என்ற காரணத்தால் பாஜக வேட்பாளர் அதிமுக தலைவர்களின் நினைவிடத்திற்கு சென்றதாக தெரிவிதனர். மக்கள் பாஜகவின் நாடகத்தை நம்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.

திமுக வெற்றி பெற்றால் 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்காது.. தோல்வி அடைந்தால் மட்டுமே கிடைக்கும்- வானதி சீனிவாசன்

click me!