திமுக சார்பாக மத்திய அமைச்சராக இருந்த நடிகர் நெப்போலியன், பாஜகவில் இணைந்து கட்சி பணியாற்றி நிலையில் குடும்பத்தோடு அமெரிக்கா சென்று தங்கிவிட்டார். இந்தநிலையில் இன்று சென்னை வந்தவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
திரைத்துறை டூ அரசியல்
புது நெல் புது நாத்து என்கிற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனவர் நெப்போலியன், இதனையடுத்து சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திமுக தலைவர் கலைஞர் மீது இருந்த பற்று காரணமாகவும் தனது மாமா கே.என் நேரு அமைச்சராக இருந்ததாலும் திமுகவில் இணைந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அமெரிக்காவில் நெப்போலியன்
மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர், கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதையடுத்து பாஜகவிற்கு சென்றார். அங்கு சில வருடங்கள் மட்டுமே இருந்தார். அப்போது நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக நாடு முழுவதும் பல இடங்களில் சிகிச்சைக்காக அழைந்தார். ஆனால் எங்கும் உரிய வகையில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால் அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அங்கேய குடும்பத்தோடு தங்கிவிட்டார் நெப்போலியன்.
நடிகர் திரு. நெப்போலியன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்களை சந்தித்து, தனது மகன் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். pic.twitter.com/vqTCk3vRA5
— CMOTamilNadu (@CMOTamilnadu)
முதல்வரை சந்தித்த நெப்போலியன்
அங்கு ஐடி நிறுவனத்தை தொடங்கியவர் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார். மேலும் அமெரிக்காவில் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது தமிழகம் வரும் நெப்போலியன் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்தநிலையில், நெப்போலியனின் இரண்டாவது மகன் குணால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். இந்தநிலையில் தனது இரண்டாவது மகன் குணாலுக்கு திருணம் செய்ய நெப்போலியன் திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் வந்த நெப்போலியன், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது தனது மகன் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கினார்.