அரசு கலை கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்தித்தார்.
முதலமைச்சர் மேற்கொண்டு வரும் நம்பிக்கைகள் காரணமாக உயர் கல்வித் துறை வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் 2,46,295 மாணவ மாணவியரிடம் பெறப்பட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான இடங்கள் 1,07,299. இதுவரை 80,804 இடங்கள் நிரப்ப பட்டுள்ளன. 27,215 காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் அதிகம் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசினாலும், மாநில கல்விக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் 2 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி.. ஆனால் 15 நிபந்தனைகள்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, அடுத்த மாதம் மூன்றாம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாகவும், திறந்தபின் கல்லூரிகளில் காலியிடங்கள் இருப்பின் தொடர்ந்து 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்
மாணவர் சேர்க்கை சமுகநீதியை பின்பற்றி அவர்கள் பெற்ற மதிப்பெண் BC, MBC SC, ST என விண்ணப்பித்தவர்களுக்கு பிரிவு வாரியான ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.