அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்ற வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
எய்ம்ஸ் எங்கே? செங்கல்லுடன் போராட்டத்தில் குதித்த திமுக கூட்டணி கட்சிகள்
undefined
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வினோத் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு குறித்த விசாரணை அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நடத்தையில் சந்தேகம்; நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்
வழக்கின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட வினோத் குமாருக்கு 21 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.