PKL10: சரியாக கணித்த ஏசியாநெட் நியூஸ் தமிழ் - ஹரியானாவை வீழ்த்தி டிராபியை தட்டி தூக்கிய புனேரி பல்தான்!

புரோ கபடி லீக் தொடரின் 10 ஆவது சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் புனேரி பல்தான் அணியானது 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியனானது.


புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு, நொய்டா என்று பல பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், பெங்களூரு காளைகள், பாட்னா பைரேட்ஸ் உள்பட 12 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில் கடைசியாக புனேரி பல்தான், பாட்னா பைரேட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், தபாங் டெல்லி என்று 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஷோஃபி எக்லெஸ்டோன் சுழலுக்கு திணறிய குஜராத் – கார்ட்னர், லிட்ச்பீல்டு தாக்குபிடிக்க 142 ரன்கள் எடுத்த ஜிஜி!

Latest Videos

 

அரையிறுதிப் போட்டி

இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய இரு அணிகள் மட்டுமே 22 போட்டிகளில் முறையே 17 மற்றும் 16 போட்டிகளில் வெற்றி பெற்று 96 மற்றும் 94 புள்ளிகள் பெற்று நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

எலிமினேட்டர்

எலிமினேட்டர் 1 மற்றும் எலிமினேட்டர் 2 போட்டிகளில் பாட்னா பைரேஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 2 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Anant Ambani:அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீவெட்டிங் திருமணத்திற்கு வருகை தந்த கிரிக்கெட் பிரபலங்கள்!

அரையிறுதிப் போட்டி

முதல் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. இதே போன்று 2ஆவது அரையிறுதிப் போட்டியில் புனேரி பல்தான் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டி – ஹரியானா ஸ்டீலர்ஸ் – புனேரி பல்தான்

இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 14 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், 5 போட்டிகளில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதில், ஒரு போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது.

UP Warriorz vs Gujarat Giants: வெற்றிக்காக போராடும் குஜராத் ஜெயிண்ட்ஸ் – டாஸ் வென்ற யுபி பவுலிங்!

இந்த நிலையில் தான் இன்று இறுதிப் போட்டி நடந்தது. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த புனேரி பல்தான் அணியானது 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் இந்த ஆண்டு டிராபியை தட்டி தூக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் – தடுத்து நிறுத்திய யுபி வாரியர்ஸ் வீராங்கனை அலிசா ஹீலி!

click me!