நார்வேயில் நடைப்பெற்று வரும் சர்வதேச செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் கால்சனை வீழ்த்தினார்.
நார்வே நாட்டில் சர்வதேச உலக செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 சுற்றுகள் நடைபெறும் இந்த செஸ் தொடரில் அதிக புள்ளிகள் பெறுபவர் உலக செஸ தொடரை கைப்பற்றி வெற்றி பெறுவார். அதன் அடிப்படையில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் பங்கு பெறும் இத்தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மூன்றாவது சுற்றில் உலகச் சாம்பியன் கால்சனை வெற்றி பெற்று இருக்கிறார்.
முன்னதாக நடைபெற்ற இரண்டாவது சுற்றில் சீனாவின் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார். தொடர்ந்து இன்று நடைப்பெற்ற மூன்றாவது சுற்றில் வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிக்ஞானந்தா அபாரமாக விளையாடி 5 முறை உலக சாம்மியன் பட்டம் வென்ற கால்சனை வீழ்த்தினார். இதன் மூலம் 10 சுற்றுகள் உள்ள இந்த செஸ் தொடரில் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
10 சுற்றுகள் உள்ள தொடரில் 3 முடிவடைந்து இருக்கிறது மீதம் 7 சுற்றுகள் நடைபெற்று அதில் யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்கள் சாம்பியன் படத்தை பெற்று உலக சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள். தற்போது இந்தியாவின் பிரக்ஞானந்தா முதல் இடத்தில் உள்ளதால் சாம்பியம் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.