ஆசிய கோப்பை கால்பந்து தொடர் – ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் இந்தியா தோல்வி!

By Rsiva kumarFirst Published Jan 14, 2024, 12:43 PM IST
Highlights

ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்று வருகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அந்த அகையில் 18ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரானது கடந்த 12 ஆம் தேதி கத்தாரில் தொடங்கியது. இந்த தொடரில் 24 அணிகள் இடம் பெற்று 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகள் இடம் பெற்று மொத்தமாக 36 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில், இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

India vs Afghanistan 2nd T20I: 429 நாட்களுக்கு பிறகு டி20 போட்டியில் களமிறங்கும் விராட் கோலி!

Latest Videos

Group A: கத்தார்; சீனா; தஜிகிஸ்தான்; லெபனான்

Group B: ஆஸ்திரேலியா; உஸ்பெகிஸ்தான்; சிரியா; இந்தியா

Group C: ஈரான்; ஐக்கிய அரபு நாடுகள்; ஹாங்காங், பாலஸ்தீன்

Group D: ஜப்பான்; இந்தோனேஷியா; ஈராக்; வியட்நாம்

Group E: கொரியா; மலேசியா; ஜோர்தான்; பக்ரைன்

Group F: சவுதி அரேபியா; தாய்லாந்து; கிர்கிஸ்தான்; ஓமன்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு!

நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், முதல் பாதி ஆட்டத்தில் ஒரு அணிகளும் ஒரு புள்ளிகள் கூட பெறவில்லை. இதையடுத்து நடந்த 2ஆவது பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஜாக்சன் இர்வின் 50ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, அடுத்து 73ஆவது நிமிடத்தில் ஜோர்டன் போஸ் கோல் அடித்தார்.

சச்சினே சந்திக்க ஆசைப்படும் அந்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? 2 கையுமே இல்லை, கழுத்தால் பேட் செய்யும் அமீர்

இதனால், ஆஸ்திரேலியா 2-0 என்று முன்னிலை பெற்றது. கடைசி வரை இந்திய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 2-0 என்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதுவரையில் குரூப் பியில் நடந்த 4 போட்டிகளில் இந்தியா மட்டுமே தோல்வியை தழுவியது. மேலும், உஸ்பெகிஸ்தான் மற்றும் சிரியா அணிகள் விளையாடிய போட்டி டிராவில் முடிந்தது. மேலும், ஆஸ்திரேலியா விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – அகமதாபாத்தில் நடந்த காத்தாடி திருவிழா!

click me!