ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆண்டுதோறும் நடக்கும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 13ஆவது சீசன் இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக தொடங்கியது. மலேசியாவின் தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த ஹாக்கி தொடரானது வரும், 16ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில், 16 அணிகள் இடம் பெற்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
South Africa vs India 2nd T20I: 9 டி20 போட்டிகளுக்கு பிறகு தனது முதல் அரைசதம் அடித்த ரிங்கு சிங்!
இதில், ஏ பிரிவில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா ஆகிய அணிகளும் பி பிரிவில் எகிப்து, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய அணிகளும், சி பிரிவில் இந்தியா, தென் கொரியா, ஸ்பெயின், கனடா ஆகிய அணிகளும், டி பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
South Africa vs India 2nd T20I Live Score: விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!
இதில் இந்தியா தனது முதல் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது. 2ஆவது போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது. இதையடுத்து 3 ஆவது போட்டியில் கனடாவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் தான் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய ஹாக்கி அணிக்காக ஆதித்யா அர்ஜுன் லலாகே (34’), ஆரைஜீத் சிங் ஹண்டால் (35’), சவுரப் ஆனந்த் குஷ்வாஹா (52’), கேப்டன் உத்தம் சிங் (57’) ஆகியோர் கோல் அடித்தனர். நெதர்லாந்து அணியில் டிமோ போயர்ஸ் (5’), பெபிஜின் வான் டெர் ஹெய்டன் (16’) மற்றும் ஒலிவியர் ஹார்டென்சியஸ் (44’) ஆகியோர் கோல் அடித்தனர். இதன் மூலமாக இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.