மனிதர்களாக பிறந்து ஒரு குறிப்பிட்ட வயது வந்த அனைவருக்கும் உடல் ரீதியாக இணைவதற்கான ஆசைகள் தோன்றுவது இயல்புதான். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் உணர்வுகள் தோன்றவில்லை என்றால் அதைத்தான் டிசையர் டிஸ்ஆர்டர் (Desire Disorder) என்று அழைக்கிறார்கள். சில சமயங்களில் இதை ஹைபோ ஆக்டிவ் செக்ஸுவல் டிசையர் டிஸ்ஆர்டர் (Hypoactive Sexual Desire Disorder) என்றும் அழைக்கிறார்கள்.
மருத்துவர்கள் இந்த டிசையர் டிஸ்ஆர்டர் என்பதை விளக்கும் பொழுது பொதுவாக ஒரு மனிதன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளும் ஆசையை வெறுக்கும் பொழுது அல்லது அது போன்ற எண்ணங்களை கூட மனதில் எழவிடாமல் இருக்கும் ஒரு நிலையை தான் டிசையர் டிஸ்ஆர்டர் என்கிறார்கள்.
சரி இந்த நிலை ஒருவருக்கு இருக்கின்றது என்பதை மருத்துவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?
undefined
முன்பு இருந்தது போல சரியாக உங்களால் உடலுறவில் கவனத்தை செலுத்த முடியவில்லை என்றாலும் இல்லை அது குறித்த ஆசைகள் வருவதில்லை என்றாலோ அதை வைத்து மருத்துவர்கள் உங்களுக்கு இந்த வகை Disorder இருக்கிறதா என்பதை அறிவார்கள்.
பாம்பு கடித்தால் என்ன செய்வது? உயிரை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இப்படி ஒருபோதும் செய்யாதீங்க..!!
உங்களால் உடல் உறவில் கவனத்தை செலுத்த முடியவில்லை என்று நினைத்து வருத்தமான மனநலையில் நீங்கள் அழிந்து போவதை வைத்து மருத்துவர்கள் இதை கனிக்கிறார்கள். உங்கள் காதல் வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் இந்த குறைபாடு ஏற்படுத்தும் பிரச்சினைகளை வைத்து கூட இதை மருத்துவர்கள் அறிந்து கொள்கிறார்கள்
யாருக்கெல்லாம் இந்த குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது?
இந்த டிசையர் டிசார்டர் பொறுத்தவரை இதற்கு ஆண், பெண் என்ற பேதம் இல்லை, இருப்பினும் இது ஆண்களை விட பெண்களிடையே தான் அதிக அளவில் காணப்படுகிறது. சில ஆய்வுகளில் முடிவுகளின்படி 10 பெண்களில் ஒரு பெண்ணுக்காவது இந்த DD இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நமது மூளையில் சுரக்கும் சில அமிலங்களால் இந்த DD ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில் கணவன் மனைவியிடையே ஏற்படுகிற அதீத பிரச்சனைகளும் சண்டைகளும் இதற்கு வழி வகுப்பதாகவும் கூறப்படுகிறது. சரியான உறக்கம் இல்லாத பொழுதும், பெண்களைப் பொறுத்தவரை குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களிடையேயும் அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மத்தியிலும் இந்த DD அதிக அளவில் காணப்படுகிறது.
சரி இதற்கு தீர்வு தான் என்ன?
மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மட்டுமே இதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். காரணம் இது ஒரு கொடிய நோயோ, அல்லது நம் உடலை முற்றிலுமாக பாதித்துவிடும் செயலோ அல்ல. ஆகையால் நிச்சயம் இதற்கென்று பிரத்தியேக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று நீங்கள் விரைவில் குணமடையலாம்.