Sex Tips For Men : கணவன் மனைவி உறவில் செக்ஸ் ஒரு முக்கிய அங்கமாக வகிக்கிறது. அதற்கு பாலுறவுத் திறன் நன்றாக இருந்தால் மட்டுமே இருவருக்கும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு ஆணும் தங்கள் துணையுடன் நல்ல செக்ஸ் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் உடலுறவில் சரியில்லை என்றால், உங்கள் மனைவி திருமணத்துக்கு புறம்பான உறவுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இதற்கு உங்களை நீங்கள் பாலுறவுத் திறனில் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
உங்களால் சரியாக உடலுறவில் ஈடுபட முடியாததற்கு முக்கிய காரணம் உங்களது பாலியல் ஆரோக்கிய மோசமாக இருப்பதுதான். ஏனெனில், நீங்கள் மோசமான வாழ்க்கை முறை மற்றும் போதை பழக்கத்தில் அதிகமாக ஈடுபட்டிருப்பதால் தான். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்றால், நீங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை வாழ்கிறீர்கள் என்றால், இங்கே குறிப்பிட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உடலுறவில் என்ஜாய் பண்ண முடியும்.
பாலியல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பது எப்படி?
1. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்:
நீங்கள் வெளி உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அதை முடிந்த அளவிற்கு குறையுங்கள் அல்லது முற்றிலுமாக நிறுத்துவது நல்லது. நொறுக்கு தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் பாலியல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை உண்டாக்கும் சாத்தியம் உள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றது.
இதையும் படிங்க: செக்ஸ் வேண்டாம்னு தவிர்ப்பதால் எவ்ளோ ஆபத்துக்கள் வரும் தெரியுமா?
2. ஆண்குறியை ஆரோக்கியமாக வையுங்கள்:
நீங்கள் உங்கள் ஆண்குறியை ஆரோக்கியமாக வைத்தால் மட்டுமே உங்களது செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்பினால், தொடர்ந்து எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங்கள். முக்கியமாக, அதன் நீளம் அல்லது அகலத்தை அதிகரிக்க நீங்கள் எந்தவித சாதனத்தையும் அல்லது மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் தூய்மையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் போதும். மேலும், காலாவதியான அல்லது அழுக்கான ஆடைகளை ஒருபோதும் அணியக்கூடாது.
இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் ஆண்கள் இப்படி பண்ணினால் பெண்களுக்கு ரொம்ப புடிக்குமாம்!!
3. உடற்பயிற்சி செய்யுங்கள்:
வழக்கமான உடற்பயிற்சி செய்வது பாலியல் ஆற்றலுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இதற்காக நீங்கள் அதிக எடை தூக்கும் பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இலகுவான பயிற்சிகளை மட்டுமே செய்தால் போது. இதுவே, உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. மது மற்றும் சிகரெட் குடிப்பதை உடனே நிறுத்துங்கள்:
நீங்கள் நீண்ட காலமாக உடலுறவில் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உடனே மது மற்றும் சிகரெட் குடிப்பதை நிறுத்தி விடுங்கள். இதை உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். மேலும், விறைப்புத்தன்மை போன்ற கடுமையான பாலியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D