கணவனும், மனைவியும் உடல் ரீதியாக உறவு கொள்வதனால் மட்டுமே அவர்களுக்கு இடையில் ஒரு நல்ல உறவு அமைந்து விடுவதில்லை.
மாறாக அந்த உடல் உறவையும் தாண்டி மூன்று முக்கிய விஷயங்களை கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் கடைபிடிக்க வேண்டும். அந்த மூன்று விஷயங்கள் என்னென்ன இந்த பதிவில் காணலாம்
Mutual Respect, அதாவது ஒருவருக்கு ஒருவர் வழங்கிக்கொள்ளும் பரஸ்பர மரியாதை.. நான் கணவன், ஆகவே நீ எனக்கு கீழ் தான் என்று ஆண்கள் நினைப்பதும் தவறு. அதேபோல ஒரு பெண், அந்த ஆண் எப்போதும் தனக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று நினைப்பதும் தவறு. இருவரும் மனிதர்கள், இந்த சமூகத்தின் அங்கம், ஆகவே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, மரியாதைகொடுத்து வாழ்ந்து வருவதே Mutual Respect. இது ஒரு நல்ல உறவின் முக்கிய அங்கம்.
உணவை வேகமாக சாப்பிடுவதால் இத்தனை பிரச்சனைகள் ஏற்படுமாம்..
Mutual Trust, அதாவது ஒருவர் மேல் ஒருவர் வைக்கின்ற பரஸ்பர நம்பிக்கை, இந்த ஒரு விஷயம் பார்க்க சிறுதுபோல இருந்தாலும், இன்று கணவன் மனைவி உறவில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துவது இந்த நம்பிக்கை இல்லாமல் போவது தான். கணவன் மற்றும் மனைவி என்று இருவரும் ஒருவரை ஒருவர் முதலில் நம்ப வேண்டும், அப்படி நம்பினாலே வீட்டில் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிறது. பிறரோடு இணைத்து பேசுவது, குத்திக்காட்டுவது போன்ற அவநம்பிக்கையான விஷயங்களை தவிர்த்துவிடுங்கள்.
Mutual Affection, இதைத்தான் பரஸ்பர அன்பு என்பார்கள், பாசம் கட்டுவதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிபோடுங்கள். கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அன்பாக நன்றி கூறுங்கள், உங்களால் முடிந்த பரிசு பொருட்களை அவ்வப்போது இல்லை என்றாலும் வருடம் ஒருமுறையாவது கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். சமையலை சேர்ந்து செய்யுங்கள், அலுவலகம் சென்று இருவரும் திரும்பும்போது கட்டியணைத்து முத்தமிடுங்கள்.
இவை அனைத்தும் ஒரு வலுவான குடும்பத்தை உண்டாகும், மறந்துவிடாதீர்கள் இவை மூன்றையும் கண்டு வளரும் உங்கள் குழந்தைகள் ஒரு நல்ல மனிதர்களாக இந்த சமுதாயத்தில் வலம்வர போகிறார்கள்.
இந்த 4 விஷயத்தை கடைபிடிங்க தூக்கம் செமயா வரும்.. ஒரு நல்ல தூக்கம் தான் சிறந்த மனிதனை உண்டாகுமாம்!