Asianet News TamilAsianet News Tamil

உணவை வேகமாக சாப்பிடுவதால் இத்தனை பிரச்சனைகள் ஏற்படுமாம்..

வேகமாக உணவு சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை, மனச்சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Eating food fast can cause so many problems.. Experts warn..
Author
First Published Jul 21, 2023, 3:35 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பிஸியான வாழ்க்கை முறைகள், நேரக் கட்டுப்பாடுகள் அல்லது பழக்கவழக்கங்கள் ஆகியவை உணவு சாப்பிடும் மாற்றங்களில் முக்கிய காரணங்களாக மாறிவிட்டன. எனவே பலரும் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்க செல்கிறோம். ஆனால் சில நபர்கள் மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற உணர்ச்சி அல்லது உளவியல் காரணிகளுக்கு பதிலளிக்கும் விதமாக விரைவாக சாப்பிடலாம். எனினும் வேகமாக உணவு சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை, மனச்சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகப்படியான உணவு மற்றும் எடை அதிகரிப்பின் ஆபத்து

மிக விரைவாக சாப்பிடுவது அடிக்கடி அதிகப்படியான உணவை சாப்பிடும் சூழலை உருவாக்கும். ஏனெனில் வயிறு நிரம்பிவிட்டது என்ற உணர்வுகளை மூளை பதிவு செய்ய போதுமான நேரம் இல்லை, இது எடை அதிகரிப்பு மற்றும் செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் அண்ட் பப்ளிக் ஹெல்த் (Journal of Preventive Medicine and Public Health) என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 60% குழந்தைகள் மிக விரைவாக சாப்பிடுகிறார்கள்.

"உணவு நடத்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதற்கான குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை தொடர்பான ஆபத்து காரணிகளாக வெளிப்பட்டன. வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் அதிகமாக சாப்பிடுபவர்கள் அதிக எடையுடன் இருப்பதற்கான அபாயத்தை மூன்று மடங்கு அதிகம், வேகமாக சாப்பிடுபவர்கள் அதிக எடையுடன் இருப்பதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகம்" என்று ஆய்வுக் கட்டுரை மேலும் கூறுகிறது.

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்

செரிமான பிரச்சனைகள்: அதிகஅளவிலான உணவுப் பகுதிகளை விரைவாக உட்கொள்வது செரிமான அமைப்பை கஷ்டப்படுத்தி, அஜீரணம், வீக்கம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். மேலும் வேகமாக சாப்பிடும் போது இது அதிக காற்றை விழுங்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, இதன் விளைவாக வீக்கம் ஏற்படுகிறது. எனவே மெதுவாக சாப்பிடுவதே செரிமானத்திற்கு எளிதானது

ரத்தச் சர்க்கரை : விரைவாகச் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும், குறிப்பாக அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும் போது, இன்சுலின் ஒழுங்குமுறையை பாதிக்கும். டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.

மெதுவாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மெதுவாக சாப்பிடுவதால் உணவு எடை மேலாண்மைக்கு நன்மை பயக்கும். வேகமாக சாப்பிடுவதை விட குறைவான அளவு உணவை உட்கொள்ள உதவுகிறது. சிறந்த செரிமானத்திற்கு உதவும். பசியைக் குறைக்கும் மற்றும் மனநிறைவை அளிக்கும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் சுரக்கும். ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்சும்.

உணவை விழுங்குவதற்கு முன் ஒவ்வொரு உணவையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மெதுவாகச் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உணவின் ஒட்டுமொத்த இன்பத்தையும் மேம்படுத்துகிறது. அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கிறது. 

என்றென்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த டீயை தினமும் குடித்தால் போதும்.. மேலும் பல நன்மைகள்..

Follow Us:
Download App:
  • android
  • ios