Sex Myths And Facts : செக்ஸ் விஷயத்தில் இருக்கும் சில கட்டுக் கதைகளை உண்மை என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அது என்னவென்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நாம் வாழும் இந்த சமூகத்தில் செக்ஸ் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. இருப்பினும், செக்ஸ் பற்றி பல கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் பரவி உள்ளது. மேலும் அதை மக்கள் உண்மை என்றும் நம்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஒருவர் முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது முதலில் அவர் பல விஷயங்களை சிந்திக்க தொடங்குகிறார். அதுமட்டுமின்றி, அது குறித்து இணையத்திலும் தெரிந்து கொள்கிறார். குறிப்பாக செக்ஸ் பற்றி சில விஷயங்கள் உண்மை என்று நம்பப்படுகிறது. ஆனால், அவை உண்மையல்ல. எனவே செக்ஸ் பற்றி சில கட்டுக்கதைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
செக்ஸ் பற்றி சில கட்டுக்கதைகள்:
1. விறைப்புத்தன்மை நீண்ட நேரம் இருக்க:
முதல்முறையாக உடலுறவு வைக்கும் ஆண்கள் கண்டிப்பாக இந்த பொய்யை நம்புவார்கள். முக்கியமாக, விறைப்புத்தன்மை நீண்ட நேரம் நீட்டிக்க, ஆபாசப் படம் பார்த்தால் நல்லது என்றும் , அப்போது தான் 30 முதல் 40 நிமிடங்கள் வரை உடலுறவு கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். மேலும், அதன் மூலம் அவர் தனது துணையை சந்தோஷப்படுத்த முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், அது தவறு ஏனெனில், ஆபாசப் படத்தில் ஒரே டேக்கில் எடுக்கப்படுவதில்லை. பல டேக்கில் எடுக்கப்படும்.
2. செயல் திறன் நன்றாக இருக்க:
முதல்முறையாக, உடலுறவு கொள்ளும்போது பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேரம் உடலுறவில் இருக்க வேண்டும் என்றும், சிறப்பாக செய்ய வேணடும் என்றும் நினைக்கிறார்கள். ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள். ஆனால், அப்படி நினைப்பது தவறு. ஏனென்றால், முதல் உறவின் போது நீங்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால், காலப்போக்கில் நீங்கள் சிறந்து விளங்குவர்.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் உடலுறவு வைக்கலாமா? இதனால் கருச்சிதைவு ஏற்படுமா? உண்மை இதோ!!
3. முள் விளையாட்டு தேவையில்லை:
முதல்முறையாக உடலுறவு கொள்ளும் போது முள் விளையாட்டு தேவை இல்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. இது உடலுறவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், உங்களது துணை கிளைமேக்ஸ் அடைய வேண்டுமெனில், உடலுறவு மட்டும் போதாது முள் விளையாட்டு தேவை. மேலும், இது உங்கள் துணையை திருப்திப்படுத்தும்.
இதையும் படிங்க: செக்ஸுக்கு முன்பு இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க! அப்புறம் உங்க துணை மதிக்கவே மாட்டாங்க!
4. அண்குறியின் அளவு முக்கியம்:
அண்குறியின் அளவு உடலுறவுக்கு மிகவும் முக்கியமானது என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். மேலும், தங்களுடையது நீளமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அது அவசியமில்லை. உங்களுக்கு தெரியுமா.. உங்களது ஆண் குறியின் அளவு 3 அங்குலமாக இருந்தாலும் உங்களால் உடலுறவை முழுமையாக அனுபவிக்க முடியும் மற்றும் சிறப்பாகவும் செயல்பட முடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்கள் துணை உங்களை விரும்புவார். எனவே, இதற்கு உங்கள் ஆண்குறியின் நீளம் அதிகம் முக்கியமில்லை.
5. மாதவிடாய் காலத்தில் உடலுறவு:
பல ஆண்கள் தங்கள் மனைவிக்கு மாதவிடாய் இருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். முக்கியமாக, சில ஆண்கள் அந்த நேரத்தில் அவர்கள் ஆணுறை கூட பயன்படுத்துவதில்லை. ஆனால், இது தவறு. மேலும், மாதவிடாய் காலத்தில் பெண்கல் கர்ப்பமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், இதுபோன்ற நேரங்களில் STDகளின் ஆபத்து அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D