உடலுறவுக்கு பிறகு நீங்கள் செய்யவேண்டிய சில விஷயங்கள்.. உடல்நலத்திற்கு அது நல்லதாம் - டாக்டர்ஸ் அட்வைஸ்!

By Ansgar R  |  First Published Aug 8, 2023, 11:08 PM IST

நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக செய்ய வேண்டிய செயல்கள், அல்லது உண்ண வேண்டிய உணவுகள் குறித்து பல பதிவுகளில் பார்த்திருப்போம். ஆனால் ஒரு நல்ல உடல் உறவுக்கு பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.


சிறுநீர் கழித்தல்..

நீங்கள் உடலுறவில் ஈடுபடும் பொழுது, உங்கள் உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாயான உங்கள் சிறுநீர் குழாய்களில் பாக்டீரியாக்கள் நுழைய சில வாய்ப்புகள் உள்ளது. இவை தொற்று நோய்களை ஏற்படுத்தும் அல்லது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியது. ஆகையால் நீங்கள் ஒரு நல்ல உடல் உறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பது நல்லது.

Latest Videos

undefined

பிறப்புறுப்பை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்..

நீங்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, உங்கள் பிறப்புறுப்பை கிரீம், லோசன்கள் அல்லது சோப்பு போன்ற கடினமான விஷயங்களால் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முடிந்தால் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் அதை நீங்கள் சுத்தம் செய்து கொள்ளலாம், அல்லது சாதாரண தண்ணீரில் உங்கள் பிறப்பு உறுப்பை நீங்கள் சுத்தம் செய்துகொள்ளலாம்.

உடலுறவில் ஆசை இல்லையா? இதைத்தான் Desire Disorder என்கிறார்களா? சரி இது யாருக்கெல்லாம் வரும்? - ஒரு பார்வை!

தண்ணீர் குடியுங்கள்..

உடலுறவு முடிந்த பிறகு நீங்கள் தண்ணீர் குடிக்கும் பொழுது அது உங்கள் உடலில் நீர் சத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் உங்களுக்கு சிறுநீர் கழிக்க அது வழிவகுக்கும், அதன் மூலம் தேவையற்ற கழிவுகள் வெளியேறவும் உதவும்.

ஆடைகள்..

உடலுறவு முடிந்தபிறகு இறுக்கமான ஆடைகளை அணியாமல், கொஞ்சம் தளர்வான ஆடைகளை அணிந்து, காற்றோடு படுத்து தூங்கினால் அது பல நன்மைகளை பயக்கும். குறிப்பாக ஆண்களை விட பெண்கள் உடலுறவு கொண்டு முடித்த பிறகு, கொஞ்சம் காற்றோட்டமான ஆடைகளை உடுத்தி உறங்குவது மிக மிக நல்லது.

கைகளை கழுவுதல்..

உடலுறவின் போது நீங்கள் ஒருவருக்கொருவர் உங்களுடைய துணையின் பிறப்பு உறுப்புகளை அல்லது உடலில் பிற பாகங்களை தொடும் சூழல் ஏற்படும். ஆகையால் உடலுறவு முடிந்த பிறகு, உங்கள் பிறப்புறுப்பை கழுவுவது போல, உங்கள் கைகளையும் சுத்தமாக்கிக் கொள்வது சிறந்தது.

திருமண உறவில் தொடரும் சிக்கல்.. தம்பதிகள் பிரிவதற்கு முக்கிய காரணங்களே இவை தானாம்..

click me!