உண்மையில் மோதல் இல்லாத உறவு என்று எதுவுமே இல்லை. ஆனால் காரணமின்றி தொடர்ந்து சண்டை, சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படுவதால், அது அந்த உறவின் முறிவுக்குத் தான் வழிவகுக்கிறது. ஆனால், தினமும் காலையில் கணவன்-மனைவி இவற்றைச் செய்தால், காரணமில்லாமல் சண்டை சச்சரவுகள் வராதாம். அந்த சீக்ரெட் என்ன?
ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு, பெண்களும் ஆண்களும் திருமண வாழ்க்கையில் நுழைகிறார்கள். சில தம்பதிகளின் வாழ்க்கை சீராக செல்கிறது, ஆனால் தீடீரென்று அது விவாகரத்து வரை செல்கிறது. திருமண வாழ்வில் கணவனும் மனைவியும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இப்படி செய்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
கொஞ்ச நேரமாவது பேசுங்கள்
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, பகலில் கணவன் மனைவி கொஞ்ச நேரமாவது பேச வேண்டும். பல பிரச்சனைகள் பேசாமல் இருப்பதால் தான் வருகின்றனர். ஒருவரோடு ஒருவர் பேசுவது மிகவும் நல்லது. எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பேசுங்கள்.
உங்கள் குழந்தை மனநல பிரச்சனை உடன் போராடுகிறது என்பதை எப்படி கண்டறிவது? இவை தான் அறிகுறிகள்..
காலை உணவை ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள்
தினமும் காலை டீ குடிப்பதையும், காலை உணவை கணவன் மனைவியாக ஒன்றாக சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் பல விஷயங்களைப் பற்றி பேசுவீர்கள். ஆனால் இந்த நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நன்றி சொல்லுங்கள்
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்களுக்கு துணை நிற்பது உங்கள் வாழ்க்கை துணை தான். அதனால் தான் எந்த சிறு உதவி செய்தாலும், அவ்வப்போது நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள். அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை நீங்கள் அவர்களிடம் சொன்னால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ஆகவே எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வது மிகவும் நல்லது.
ஆண்களே.. பெண்களே.. உடலுறவின்போது இதையெல்லாம் நிச்சயம் தவிர்க்கணும் - நிபுணர்கள் தரும் அட்வைஸ்!