முப்பது வயசுக்கு மேல ஆகிடுச்சா? கல்யாணம் பண்ண போறிங்களா? - இந்த விஷயத்தை எல்லாம் நல்லா தெரிஞ்சுக்கோங்க!

By Ansgar R  |  First Published Oct 16, 2023, 11:35 PM IST

திருமணம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம், சிலருக்கு 30 வயதிற்குள் திருமணம் நடந்து முடிந்துவிடுகிறது. அதே நேரத்தில் சிலருக்கு 30 வயதை தாண்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதில் உள்ள வயது வித்யாசம் உண்மையில் பல மாற்றங்களை கொண்டுவரும். 


திருமணத்திற்கு சரியான வயது எது என்ற விவாதம் எப்போதும் இருந்து வருகிறது. சிலர் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் குறிப்பாக மெத்த படித்தவர்கள் 30 வயதைத் தாண்டியவுடன் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

காரணம், நன்றாகப் படித்து, ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, நல்ல நிலையில் செட்டில் ஆன பிறகுதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதன் விளைவாக, 30 ஆண்டுகள் எளிதாக கடந்து செல்கின்றன. சரி இதில் 30 வயதை தாண்டி திருமணம் செய்துகொள்பவர்கள் என்ன கவனிக்க வேண்டும்?

Tap to resize

Latest Videos

குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல் சொல்பேச்சை கேட்க இதை ஃபாலோ பண்ணுங்க..!!

தேவைகள் பற்றிய தெளிவு

பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதல் இருக்கும். 30 வயது வரை பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கின்றார்கள். இது அவர்களின் மனைவியை எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது, ஆகவே 30 வயதிற்கு பிறகு திருமணம் செய்வதில் ஒரு நல்லது உள்ளது. 

மனவலிமை 

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாழ்க்கையை நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ மன உறுதியைப் பெற்றிருக்கிறார்கள். இதனால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், எத்தனை ஏற்ற தாழ்வுகளை சந்தித்தாலும் முன்னேறிச் செல்கிறார்கள். ஆகையால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தங்கள் துணையோடு நின்று அதை எதிர்கொள்கின்றனர், ஆனால் 20 வயதில் திருமணமானவர்களுக்கு இந்த பக்குவம் இருக்காது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குழந்தைகளைப் பெறுவதில் சிரமம்

பொதுவாக, வயதுக்கு ஏற்ப உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தைகளைப் பெறுவதில் சிரமங்கள் இருக்கும். ஆனால் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் உயிரியலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், உறுதியான மன உறுதி இருந்தால், இந்தப் பிரச்னையைச் சுலபமாகச் சமாளிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் 30 வருடங்கள் கழித்து திருமணம் செய்பவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். உண்மையில் கருத்தரிப்பது மிகவும் கடினமானதாக மாறுகின்றது. 

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க 'இது' மட்டும் போதும்..! அது எது தெரியுமா?

click me!