5 வருசம் ஆச்சு! சம்மதத்துடன் உடலுறவு கொண்டது பலாத்காரம் ஆகாது: உயர்நீதிமன்றம் கருத்து

By SG Balan  |  First Published Mar 13, 2023, 5:32 PM IST

5 ஆண்டுகள் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொண்டதை பலாத்காரம் செய்யப்பட்டதாக ஏற்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


பாலியல் பலாத்காரம் மற்றும் நம்ப வைத்து ஏமாற்றியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதான எதிரான புகார்களை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ஐந்து வருடமாக அவருடன் உடலுறவு கொண்ட பிறகு, அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, "ஒன்றிரடண்டு முறையோ அல்லது நாள் கணக்கிலோ மாதக்கணக்கிலோ கூட அல்ல, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. துல்லியமாக ஐந்து ஆண்டுகள். எனவே, ஐந்து ஆண்டுகளாக பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொண்டதாகச் சொல்ல முடியாது. இருவருக்கும் இடையேயான அத்தகைய உறவின் காலம் குற்றச்சாட்டுகளின் கடுமையை போக்கிவிடுகிறது" என்று கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

The Elephant Whisperers: ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகள் மாயம்!

மேலும், சட்டப்பிரிவுகள் 375 மற்றும் 376 ஆகியவற்றின் கீழ் மனுதாரர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என்று கூறிய நீதிபதி, இருவருக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைகள் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் 406-வது பிரிவின் கீழ் நம்பிக்கை துரோகம் செய்த குற்றம் ஆகாது என்றும் தெரிவித்துள்ளார்.  ஆனால் குற்றம்சாட்டப்படும் நபர் சட்டப் பிரிவு 323 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

சட்டப்பிரிவு 375, பெண்ணின் சம்மதம் இல்லாம் உடலுறவை கொள்வதை பாலியல் பலாத்காரம் என்று கூறுகிறது. அதேசமயம் பிரிவு 376-ல் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கான தண்டனைகளைக் குறிப்பிடுகிறது. சட்டப் பிரிவுகள் 323 மற்றும் 506 ஆகியவை முறையே கடுமையான தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுப்பது ஆகிய குற்றங்கள் தொடர்பானவை.

KS Eshwarappa: ஸ்பீக்கர் இல்லாமல் அல்லாவுக்குக் காது கேட்காதா? பாஜக முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

குற்றம் சாட்டப்படும் நபர் பெங்களூரைச் சேர்ந்தவர். அவரும் மனுதாரரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்பியபோதும், சாதி வேறுபாடு காரணமாக திருமணம் செய்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஆனால், திருமணத்தைக் காரணம் காட்டி பல சந்தர்ப்பங்களில் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும் அது பாலியல் பலாத்காரத்துக்குச் சமமானது என்றும் வழக்கின் மனுதாரரான பெண் கூறுகிறார்.

உடலுறவின்போது ஒருமித்த கருத்து இருந்ததால் எந்த கற்பனையாலும் இது பலாத்காரத்துக்குச் சமமாகாது என குற்றம் சாட்டப்படும் நபர் வாதிடுகிறார். ஆனால், அவர் திருமணத்தை காரணம் காட்டி, தவறான வாக்குறுதி மூலம் ஒப்புதல் பெற்றார் என்பதால், அது பலாத்காரத்துக்குச் சமம் என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகிறார்.

Oscars 2023: ஆஸ்கர் விழா விருந்தில் பரிமாறப்பட உணவுகள்... பார்த்தவுடன் எச்சில் ஊற வைக்கும் சால்மன் மீன்!

click me!