Condom Size Chart: கரு உருவாவதைத் தடுப்பதற்கு, பலரும் ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், அந்த ஆணுறை, கடையில் வாங்கும் பலரும் நமக்கு பொருத்தமானது எது என்று தெரிந்து கொள்வதில்லை.
ஆரோக்கியமான உடலுறவிற்கு முக்கியமான அடிப்படையாக இருப்பது ஆணுறை பயன்பாடு. கரு உருவாவதைத் தடுப்பதற்கு என்று கூறப்பட்டாலும் இதற்கு மற்றொரு அவசிய பயனும் இருக்கிறது. உடல் தொடர்பு மூலமாகப் பரவும் தொற்றுகளைத் தடுப்பதும் ஆணுறையின் பயனாகும். பலரும் இதனைத் தவிர்த்துவிட்டு உடலுறவில் ஈடுபடுவது தேவையற்ற கர்ப்பத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் ஆபத்தான தொற்றுகளையும் உருவாக்கும். அதனால்தான் காண்டம் அணிவது அவசியமாகிறது.
ஆனால், ஆணுறைகளில் தற்போது பல வகை மற்றும் பிராண்டுகள் வந்துவிட்டன. நமக்கு பொருந்துவதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் யாருக்கு எந்த ஆணுறை சரியாக பொருந்துகிறது என்று எப்படி தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் கடைக்கு சென்று ஆணுறை வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆணுறைகளில் சைஸ் வித்தியாசங்கள் உண்டு. முதலில், ஆணுறுப்பின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை அளப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
அந்தரங்க உறுப்பில் அளக்கும் டேப்பின் ஒரு பக்கத்தை பிடித்து, ஆண்குறியின் நுனி வரை அளவிடவும். அகலத்தை அளக்க சிறிய அளவிடும் டேப்பை பயன்படுத்தி ஆண்குறியின் தடிமனான பகுதியை சுற்றி வைத்து அளக்கவும். இந்த இரு அளவுகளும் ஆண்குறி எரக்ஷன் ஆனதற்கு பிறகான அளவீடுகளாக இருத்தல் வேண்டும். இந்த இரண்டு அளவீடுகளையும் பெற்றவுடன் இதற்கு நெருக்கமாக பொருந்தக்கூடிய ஆணுறையை தேர்வு செய்ய வேண்டும்.
ஆணுறை பெரும்பாலும் ஆடைகள் அளவு போன்று கிடைக்கிறது. மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது. பெரிய அளவு, சிறிய, நடுத்தர அளவில் கிடைக்கின்றது. ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தும் என்பது ஆணுறையில் கிடையாது. ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உங்கள் நீளம் மற்றும் அகல அளவீடுகளை மனதில் கொண்டு வாங்குங்கள்.
ஆணுறை அகலத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இறுக்கமான ஆணுறை உடலுறவின் போது சங்கடம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். அதிலுள்ள மற்றொரு ஆபத்து, எளிதில் கிழிந்து போகலாம். ஆணுறை அகலத்துக்கு இந்த குறிப்புகளை பின்பற்றவும்.
நடுத்தர ஆணுறைகளின் அகலமானது - 1. 75 முதல் 2 அங்குலம் வரை இருக்கும். சிறிய ஆணுறைகள் -1.75 அங்குலத்துக்கு குறைவான அகலம் கொண்டிருக்கும். பெரிய ஆணுறைகளின் அகலம் - 2அங்குலத்துக்கு மேல் இருக்கும். ஆணுறை முழு ஆணுறுப்பையும் மூடி விந்து வெளியேறும் இடத்தில் மட்டும் சிறிய இடைவெளி விட வேண்டும்.
ஆணுறை நீளத்துக்கு இந்த குறிப்புகளை பின்பற்றவும். பொதுவாக பயன்படுத்தப்படும் நடுத்தர ஆணுறைகளின் நீளமானது - 7.25 முதல் 7.8 அங்குல நீளம் வரை இருக்கும். சிறிய ஆணுறைகள் -7 அங்குலம் முதல் 7. 8 வரை நீளம் கொண்டவை. பெரிய ஆணுறைகளின் நீளம் - 7.25 முதல் 8.1 அங்குலம் வரை இருக்கும்.
ஆண் உறுப்பின் அளவுக்கு பொருத்தமான ஆணுறை பிராண்டுகள் நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு இந்த குறிப்புகளையும் மனதில் கொண்டு தேர்வு செய்யலாம்.
பெரும்பாலான ஆணுறைகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தாலும், சிலவற்றில் உள்ள லேட்டக்ஸ் அலர்ஜியாலும், Nonoxynol-9 (N-9) எனப்படும் கலவை இருப்பதாலும், அல்லது சரியான லூப்ரிகேஷன் இல்லாததாலும் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த பிரச்சனைகள் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கும் கூட வழிவகுக்கும்.
லேட்டக்ஸ் அலர்ஜி :
ஆணுறை மெல்லிய லேட்டக்ஸ் எனப்படும் ரப்பர், பாலியுரிதேன், மற்றும் பாலிஐசோபிரேன் ஆகிய மெட்டீரியல்களால் செய்யப்படுகிறது. பலருக்கும் லேட்டக்ஸ் ஆணுறை அலர்ஜியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அரிப்பு, ஹைவ்ஸ் அலர்ஜி, ஆகியவை ஏற்படலாம். அது மட்டுமின்றி, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சுவாசிக்கும் பாதைகளை இறுக்கமாக மாற்றலாம். நீங்களோ அல்லது உங்கள் பார்ட்னரோ லேட்டக்ஸ் ரப்பருக்கு அலர்ஜி என்றால், நீங்கள் கட்டாயமாக இதை தவிர்க்க வேண்டும்.
டபுள் எலாஸிட்டி காண்டம், லைஃப்ஸ்டைல்ஸ், டர்போ காண்டம் என பல ஆணுறை பிராண்டுகள் லீப்ரிகண்ட் பயன்படுத்துகின்றனர். இது உங்கள் துணையின் மகிழ்ச்சியை மேம்படுத்த செய்யும். தேவையெனில் ஆணுறையில் லூபிரிக்கன்ட் எண்ணெய் சேர்க்கலாம்.