Female condom: ஆணுறை தெரியும்...பெண்ணுறை பற்றி தெரியுமா..? யார்... யாருக்கு பயன்படும்..!!
கரு உருவாவதைத் தடுப்பதற்கு, பலரும் ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், பெண்ணுறைகளும் இருக்கின்றன. இவை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன.
கரு உருவாவதைத் தடுப்பதற்கு, பலரும் ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், பெண்ணுறைகளும் இருக்கின்றன. இவை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன. பெண்ணுறை அதிகமாக பயன்படுத்தலில் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம். ஆணுறை பற்றி தெரித்த அளவிற்கு பெண்ணுறை பற்றிசில விஷயங்களை பற்றி தெரியாம இருப்பது.
ஆரோக்கியமான உடலுறவிற்கு முக்கியமான அடிப்படையாக இருப்பது ஆணுறை பயன்பாடு. கரு உருவாவதைத் தடுப்பதற்கு என்று கூறப்பட்டாலும் இதற்கு மற்றொரு அவசிய பயனும் இருக்கிறது. உடல் தொடர்பு மூலமாகப் பரவும் தொற்றுகளைத் தடுப்பதும் ஆணுறையின் பயனாகும். பலரும் இதனைத் தவிர்த்துவிட்டு உடலுறவில் ஈடுபடுவது தேவையற்ற கர்ப்பத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் ஆபத்தான தொற்றுகளையும் உருவாக்கும். அதனால்தான் காண்டம் அணிவது அவசியமாகிறது.
ஆணுறை பயன்பாடு, தேவை குறித்து தெரிந்த பலரும் அதை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நம்மில் பலருக்கு பெண்ணுறையைக் குறித்து தெரிவதில்லை. இந்த உறையும் நமது உடலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யோனியின் வடிவம், பண்பு குறித்த அறிவு பலருக்கும் இல்லாதது பெண்ணுறை அதிகமாக பயன்படுத்தலில் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம். பெரிதளவில், ஆண்களின் குறியும், உடலுறவில் ஆண்களின் பங்கு குறித்து பூதாகரமான பிம்பம் ஒன்று வளர்ந்திருப்பதாலும் பெண்ணுறை பயன்பாடு குறித்து யாருக்கும் தெரிவதில்லை. பெண்ணுறையை எப்படி அணிவது என்று பார்க்கலாம்.
இந்த உறை ஒரு குழாய் போன்று இருக்கும், அதன் இரு முனைகளில் இரு வளையங்கள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் கப், டாம்பூன் போன்றவற்றை யோனிக்குள் பொருத்துவது போன்றுதான் இந்த உறையையும் உள்செலுத்த வேண்டும். இந்த பெண்ணுறையை உடலுறவுக்கு எட்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே யோனிக்குள் உட்செலுத்த வேண்டும். உடலுறவுக்குப் பின் உடனே எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். உள் வளையத்தை உள்நுழைத்து கர்ப்பப்பை வாயின் வரை கொண்டு போக வேண்டும்.
அப்போது வெளி வளையம் யோனியின் முகப்பின் அருகே இருக்கும். இப்போது விந்து இந்த பையினுள் அடைந்து விடும். பயன்பாட்டின்பின், வெளி வளையத்தை நன்றாக சுற்றி ஒரு முடிச்சு போல் ஆக்கிவிட்டு இந்த பையை மெதுவாக வெளியே இழுக்க வேண்டும். ஆண் உறையைப் போல குறி விறைப்பாகுவதற்கு பெண்கள் காத்திருக்க தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த உறையை உள்செலுத்திக் கொள்ளலாம். இவை பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது.
பெண்ணுறை உங்கள் உடலுறவு இன்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. உங்களுக்கு மட்டுமன்றி உங்கள் துணைக்கும் சிறப்பான அனுபவத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது.பெண்ணுறைகள் பெண்களின் இயற்கை ஹார்மோன்களை எந்த விதத்திலும் பாதிக்காது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புதுவகையான காண்டம்களில் இயற்கையான லாடெக்ஸ் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது எந்தவித உராய்வு சத்தத்தை உண்டாக்குவதில்லை எனவும் கூறப்படுகிறது. அதோடு பெண்களின் யோனியில் ஃபிடாகவும் இருக்கிறது. வாட்டர் அல்லது சிலிகான் தன்மையிலான வழுவழுப்பு பெண்களுக்கு பாதுகாப்பானது. குறிப்பாக லாடெக்ஸிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்துவது தவறு. ஆனால், இதில் சில தீமைகளும் இருக்கின்றன. அதாவது இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் இருவருக்கும் அரிப்பை உண்டாக்கலாம். புணர்ச்சியின்போது யோனிக்குள் சில நேரங்களில் நழுவலாம்.சந்தேகம் இருப்பின் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.