இந்தியக் குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது எனக் கூறி, தன்பாலின திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது.
தன்பாலின உறவு கொண்டவர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர், திருமணம் செய்துகொள்ள தகுந்தவரைத் தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் இல்லாமல் இருப்பது சமத்துவம், வாழ்வுரிமைக்கு எதிரானது; அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 21-ஐ மீறியதாகும்" என்று கூறி இருக்கிறார்.
கள்ளக் காதலைக் கைவிட்ட இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெயைக் கொட்டிப் பழிவாங்கிய இளம்பெண்!
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கி அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, மத்திய அரசு இதுகுறித்து பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வழக்கில் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமண வாழ்க்கையை இந்தியக் குடும்ப வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் வழக்கமான குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, "அவர்களின் திருமணத்தை அங்கீகரித்து, பதிவு செய்வதற்கு அப்பால் குடும்ப பிரச்சினைகள் பல உள்ளன. தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் ஒன்றாக வாழ்வது, இணை சேர்வது போன்றவை இப்போது குற்றமாகக் கருதப்படாமல் இருக்கலாம். இந்தியக் குடும்ப முறை அவர்களை ஒப்பிட இயலாது. ஆணும் பெண்ணும் கணவன் - மனைவியாக வாழ்ந்து, பெற்றெடுக்கும் குழந்தைகளையே குழந்தைகளாகக் கருத முடியும். குழந்தை பெற்ற பெண்ணையே தாய் எனக் கருதமுடியும்" என்றும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாறுமாறாக பாய்ந்த கார்... சாலையோரம் தூங்கிகொண்டிருந்த 3 பேர் பலி
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு தன்பாலினச் சேர்க்கையை குற்றமற்றதாகக் கருதுகிறபோதும், தன்பாலின திருமணத்திற்கு அடிப்படை உரிமை என்ற வகையில் சட்ட அங்கீகாரம் கோர முடியாது எனவும் மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் குறைந்தது நான்கு ஓரினச்சேர்க்கை தம்பதிகள் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை அங்கீகரிக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு மத்திய அரசுடன் சட்டபூர்வமான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.