Relationship: மகிழ்ச்சியான பாலியல் உறவுக்கு தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துவைத்து கொள்ளலாம்.
உடலுறவு என்பது தம்பதிகள் இருவருக்கும் இன்பமாக இருத்தல் வேண்டும். ஒருவேளை, ஒருவர் அதனை பாதுகாப்பற்றதாக இருந்தாலும் செக்ஸ் வாழ்கை மட்டுமின்றி இல்லற வாழ்க்கையும் இனிமையாக இருக்காது. தெரியாமல், உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லும் விஷயங்கள் அவர்களை மிகவும் புண்படுத்தும். நீங்கள் அதை உணராமல் இருக்கலாம். எனவே, ஆண் -பெண் இருவருக்கும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர், ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து கொள்வது அவசியம். குறிப்பாக, செக்ஸ் தொடர்பான விஷயங்களில் ஒருவருக்கொருவர் புரிதல் அவசியம்.
எனவே, ஆரோக்கியமான பாலியல் உறவுக்கு தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துவைத்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உரையாடல் அவசியம்:
ஒரு உறவில் இருக்கும் போது, ஆரோக்கியமான உரையாடல் மிகவும் அவசியம். ஏனெனில், உரையாடல்தான் தம்பதிகளுக்குள் இருக்கும் விஷயங்களை வெளியில் கொண்டு வர உதவும். ஆனால், அந்த உரையாடல் நேர்மையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். ஆம், உங்கள் செயல்கள் மட்டுமல்லாது உங்கள் வார்த்தையும் உறவில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், வார்த்தைகளை பயன்படுத்தும்போது, மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது உங்கள் உறவை கெடுத்து விடும்.
அடிக்கடி 'ஐ லவ் யூ' சொல்லுங்கள்:
உடலுறவில் முன்னுரிமை கொடுப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 'ஐ லவ் யூ' என்று சொல்வது போல் அரவணைப்பது அல்லது உடலுறவு கொள்வது ஏன் முக்கியம் என்பதை இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் கற்பிக்கும். எனவே, அடிக்கடி 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள்.
தவறான பழக்கங்களை அனுமதிக்காதீர்கள்:
தவறான தொடர்பு பழக்கங்களை அனுமதிக்கிறீர்களா? தொடர்பு என்பது உறவின் மிக முக்கியமான பகுதியாகும். எனவே, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள திட்டமிடுங்கள். அவர்களை புரிந்து வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதேபோன்று, இல்லை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். ஒரு உறவில் நீங்கள் நிலைத்து இருங்கள்.
பாலியல் விஷயங்களை வெளிப்படையாக கூறுங்கள்:
நீங்கள் பாலியல் வாழ்வில் முழு திருப்தி அடையவில்லை என்பதை உங்கள் துணைக்குத் தெரியப்படுத்துங்கள். செக்ஸில் எந்த மெத்தேட் உங்களை உற்சாகப்படுத்துது என்பதை ஒருவருக்கொருவர் பேசி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆசைகளை உங்கள் துணைக்கு தெரியப்படுத்தும் போது, செக்ஸ் தானாகவே கவர்ச்சியாக மாறி உங்களை சுகப்படுத்தும்.