Man Killed Homeless Woman : மும்பையில் ஒரு இடத்தில் பாதி அழுகிய நிலையில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மும்பையின் செவ்ரியி பகுதியில் சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 40 வயது வீடற்ற பெண்ணின் மரணம் தொடர்பாக ஒருவரை மும்பை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று பிப்ரவரி 3ம் தேதி சனிக்கிழமை அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்தார்.
சப்னா சதீஷ் பாதம் கொலையில் தொடர்புடையதாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஒப்பந்த ஊழியர் ஷெஹ்சாதா என்ற ரம்ஜான் ஷேக் (வயது 37) என்பவரை போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி என்று தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டு வாசலுக்கு சென்ற கழிவு நீர்; பக்கத்து வீட்டு பெண்ணை உலக்கையால் அடித்து கொன்றவர் கைது
கடந்த ஜனவரி 22 ஆம் தேதி, மும்பையின் செவ்ரியில் சாலையோரம் உள்ள புதர்களில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது, என்றார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய, காணாமல் போனவர்களின் அறிக்கைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
அப்போது தான் ஒரு சிசிடிவி காட்சியில், ஒரு ஜோடி ஸ்கூட்டரில் அந்த இடத்திற்கு வந்து, புதர்களுக்குள் நுழைவதைக் காண முடிந்தது. பிறகு CCTV காட்சிகள் மூலம் அந்த வாகனத்தின் உரிமத் தகடு எண்ணின் அடிப்படையில், போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் அடையாளத்தை நிறுவினர், என்றார் அந்த அதிகாரி.
அந்த பெண் வீடில்லாமல் மும்பை சென்ட்ரலில் தெருக்களில் வசித்து வந்தார் என்றும். ஷேக் அடிக்கடி உள்ளூர்க்கு வந்து செல்வார், ஜனவரி 14 அன்று, அவர் மது வாங்கித் தருவதாகக் கூறி அந்த பெண்ணை செவ்ரீக்கு அழைத்துச் சென்றதாக அந்த அதிகாரி கூறினார். ஆனால் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள அவர் வற்புறுத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் அவரை கல்லால் அடித்து அவரை கொன்றுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.