பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்வது கற்பழிப்பு குற்றமாக கருதப்படாது - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

By Ramya sFirst Published Jun 1, 2023, 2:48 PM IST
Highlights

பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்வது என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் 375வது பிரிவின் கீழ் கற்பழிப்பு குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

21 வயது பெண்ணை கொலை செய்து, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஒருவரை குற்றவாளி என தீர்ப்பளித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அந்த பெண் முதலில் கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் இறந்த உடல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. எனவே இந்த வழக்கில் கற்பழிப்பு குற்றத்தை சேர்க்க முடியாது என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 375வது பிரிவின் கீழ் பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்வது கற்பழிப்பு குற்றமாக கருதப்படாது என நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதி வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு, இது ஐபிசி பிரிவு 377ன் கீழ் இயற்கைக்கு மாறான குற்றத்தின் வரம்பிற்குள் வராது என்றும் கூறியது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் இந்திய விமானப்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. விமானிகளின் நிலை என்ன?

"ஐபிசியின் 375 மற்றும் 377 பிரிவுகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாகவோ அல்லது நபராகவோ அழைக்க முடியாது. எனவே, பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் இதற்கு பொருந்தாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சடலங்களை கண்டு ஏற்படும் பாலியல் உணர்வை குற்றமாக கருதும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் மாற்றங்களை மத்திய அரசு செய்ய வேண்டிய நேரம் இது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஐபிசியின் 377வது பிரிவைத் திருத்த வேண்டும் அல்லது குற்றமாக்க சடலங்களை கண்டு ஏற்படும் பாலியல் உணர்வை தனியான தண்டனைப் பெவிலியன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். மேலும் "இறந்தவரின் உடலின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐபிசியின் விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு இதன்மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.” என்று தெரிவித்தனர். 

ஆனால் அதே நேரத்தில் ஒரு பெண்ணின் சடலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து அரசு பிணவறைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிணவறை சுகாதாரத்தை பராமரிக்கவும், பிணவறைகளில் ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தவும், உள்கட்டமைப்பு தடைகளை அகற்றவும், பிணவறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். 

இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 வரை சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்!

click me!