ராஜஸ்தானின், அல்வார் பகுதியில் சென்று வார இறுதியில் மட்டும், மைனர் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்த 3 புகார்கள் பெறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் அல்வார் பகுதியில் 16 வயது பள்ளி சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கத்தி முனையில் மிரட்டப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பண்ணையில் தங்கி வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபரின் இரு மகள்கள், அதே பண்ணையில் வேலை செய்து வந்த இருவரால் கற்பழிக்கப்பட்டு, தற்பொழுது கர்ப்பமாகியுள்ள சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பமாகியுள்ள இரு சிறுமிகளின் தந்தை சென்ற வாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் "நான் வேலை செய்து வரும் அதே பண்ணையில் வேலை செய்து வந்த இருவர், தன்னுடைய பெரிய மகளையும், இளைய மகளையும் மிரட்டி அவர்களை கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும், இதுகுறித்து குடும்பத்தினரிடம் கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அந்த மைனர் சிறுமிகளை மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
வீட்டிற்கு லேட்டாக வந்த மகளை கண்டித்த தந்தை.. கோபத்தில் கொலை செய்த மகள் - அதிர்ச்சி சம்பவம்
ஆனால் ஒரு கட்டத்தில் வயிற்று வலியும், உடல் வலியும் தாங்க முடியாமல் கதறிய மூத்த மகளை மருத்துவரிடம் அழைத்து சென்ற பொழுது, அவர் சுமார் 7 மாத கர்பிணியாக இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அந்த இளைய பெண்ணும் கர்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த சிறுமிகளை விசாரித்த பொழுது, தாங்கள் அந்த இருவரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது அந்த இரு நபர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல அந்த 16 வயது பள்ளி சிறுமியின் வழக்கில், கடந்த ஜூலை 27ம் தேதி அவர் பள்ளிக்கு சென்ற பொழுது, மயக்க மருந்து கொடுத்து அவரை கடத்தி சென்று, அவர் கற்பழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது, அதில் தொடர்புடைய இருவர் பற்றிய வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானின் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், மணிப்பூர் விவகாரத்தை கவனிக்கும் முன்பாக, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பற்றி காங்கிரஸ் அரசு கவலைகொள்ள வேண்டும் என்று கூறிய நிலையில், அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Kerala : திருமணம் ஆகி 1 மாசம் கூட ஆகல.. பாறையில் நின்று செல்பி எடுத்த தம்பதி - 3 உயிரை பறித்த சோகம்