இஸ்ரோ உருவாக்கிய 'ஜிசாட்-20' (GSAT-20) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கான்-9' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது.
முதல் முறையாக 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ‘பால்கான்-9’ ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட்-20 (GSAT-20) செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதல் முறையாக, அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் மூலம் தனது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. மத்திய அரசின் 'நியூ ஸ்பேஸ் இந்தியா' (NSIL) நிறுவனமும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரோ உருவாக்கிய 'ஜிசாட்-20' (GSAT-20) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கான்-9' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில், அமெரிக்கவின் புளோரிடாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து இந்த 'பால்கான்-9' ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.
ஆனந்த் மஹிந்திராவையே அசர வைத்த வீடியோ! எப்படிப்பா இப்படியெல்லாம்!!
நியூ ஸ்பேஸ் இந்தியாவின் தகவலின்படி, GSAT-20 செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது. கிட்டத்தட்ட 48Gpbs HTS திறனை வழங்குகிறது. தொலைதூரத்தில் உள்ள தொலைத்தொடர்பு வசதி இல்லாத பிராந்தியங்களில் தொலைத்தொடர்பு வசதியை வழங்கும் வகையில் செயற்கைக்கோள் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய செயற்கைக்கோள் ஒப்பந்தம், விண்வெளித் துறையில் அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளின் பகுதி என்று என்எஸ்ஐஎல் ஆய்வாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் துரைராஜ் கூறுகிறார்.
பாகுபலி அல்லது LVM-3 என அழைக்கப்படும் இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட் மூலம் 4000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை மட்டுமே ஏவ முடியும். இதனால், 10,000 கிலோ வரை ஏந்திச்செல்லக்கூடிய என்.ஜி.எல்.வி. (NGLV) எனப்படும் ராக்கெட்டை விரைவாக உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தியுள்ளார்.
கூகுள் மேப் லொகேஷனை நண்பர்களுடன் ஷேர் செய்வது எப்படி?