ஆண்மை பாதிக்கச் செய்யும் 4 உணவுகள்..!!

By Dinesh TGFirst Published Oct 4, 2022, 8:32 AM IST
Highlights

தாராளமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம், அது ஆபத்தானவை என்று உறுதியாக கூறலாம். இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதால் இளம் வயதிலேயே உயிரிழப்பது, புற்றுநோய் உட்பட பல்வேறு உயிர்கொல்ல் நோய்களுக்கு ஆளாவது மற்றும் உடல்நலக் குறைபாடு பிரச்னை என அடுக்கடுக்கான உபாதைகள் ஏற்படுகின்றன. 

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது என்று மருத்துவர்கள் பலர் காலம் காலமாக கூறுவதுண்டு. ஆனால் தற்போது மக்கள் தாங்களுடைய கண்ணாலேயே சுகாதார சூழலை புரிந்துகொண்டுள்ளனர். அதனால் இப்போது தாராளமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம், அது ஆபத்தானவை என்று உறுதியாக கூறலாம். இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதால் இளம் வயதிலேயே உயிரிழப்பது, புற்றுநோய் உட்பட பல்வேறு உயிர்கொல்ல் நோய்களுக்கு ஆளாவது மற்றும் உடல்நலக் குறைபாடு பிரச்னை என அடுக்கடுக்கான உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட சில ஆய்வுகளில் ஆண்மை குறைவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு விந்து உற்பத்தி அதிகம்

ஹார்வேர்டு பல்கலைக்கழகம்  சார்பில் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் உணவுகளை உண்பவர்களுக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களை விட விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இனிமேல் தலைக்கு குளிக்க ஷாம்பூ வேண்டாம்- இது இருந்தால் போதும்...!!

அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்

பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பால் பொருட்கள் சில அத்தியாவசிய சத்துக்ளான கால்சியம், விட்டமின் டி உள்ளிடவை அடங்கியதாக இருந்தாலும், விந்து அணுக்களை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருவுறுதலுக்கு அருமருந்து; ஆண்மைக்கு பலம் சேர்க்கும் அற்புதம்- அது இதுதான்..!!

சோயா உணவு வகைகள்

பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதேபோன்று கார்பனேட்டட் பானங்களை அதிக அளவு குடிப்பதினால், விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

click me!