வயாகரா தேவையில்லை உடலுறவு சிறக்க பெண்கள் செய்ய வேண்டிய கெகல் பயிற்சி!

By Pani MonishaFirst Published Jan 2, 2023, 1:01 PM IST
Highlights

இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் வலுவாக இருப்பது பாலியல் செயல்பாட்டிற்கு அவசியமானது. அதற்கு கெகல் பயிற்சிகள் உதவியாக இருக்கும். 

கெகல் பயிற்சி ரொம்பவும் எளிய பயிற்சி. இந்த பயிற்சிகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் அவற்றை எங்கும் எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த பயிற்சியை செய்யும்போது அடிவயிறு, பிட்டப்பகுதிகள் அல்லது தொடையில் இருக்கும் தசையை இறுக்கமாக வைக்க வேண்டாம். ஒவ்வொரு தடவை தசையை சுருக்கும்போதும் இடுப்புத்தள தசைகளை கொஞ்ச நேரம் தளர்வாக வைப்பது அவசியம். 

இந்த உடற்பயிற்சிகளை செய்ய உங்களுக்கு சிறப்பு உபகரணங்கள், உடைகள் அல்லது இடம் என எதுவும் தேவையில்லை. இந்தப் பயிற்சிகளை தொடங்கும் முன்பு நீங்கள் சிறுநீர் கழிப்பது முக்கியம். கெகல் பயிற்சிகள் செய்வதால் சிறுநீர் மணடல நோய்கள், பாலியல் உறவில் மேம்பாடு கிடைக்கும். பிரசவ காலத்தில் இந்த பயிற்சிகளை செய்தால் பிரசவ வலி குறையும். கருப்பை, சிறுநீர்ப்பை, குடல் ஆகிய இடுப்பு உறுப்புகளை பராமரிக்கலாம். 

இதையும் படிங்க; உடம்பெல்லாம் வலியோட சத்தே இல்லாம இருக்கீங்களா? உளுந்து கஞ்சி செஞ்சு சாப்பிடுங்க!

முதல் பயிற்சி 

தரையில் படுத்து கொண்டு இந்த பயிற்சியை செய்யலாம். கால்களை மடக்கி இரண்டு கால்களின் பாதமும் தரையில் படும்படி  வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களுடைய பிட்டத்தையும், உடலை மெதுவாக தூக்கி கொள்ளுங்கள். மூச்சை வெளிவிடும்போது உடலை கீழே இறக்குங்கள். இதே நிலையில் 4 முதல் 5 நொடி அப்படியே இருக்கவும். இதனை 5 முதல் 6 முறையோ அல்லது 30 வினாடிகளுக்கோ செய்யலாம். 

இரண்டாம் பயிற்சி 

ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து கொண்டு இந்த பயிற்சியை தொடங்கலாம். அதற்கு பதிலாக படுத்து கொண்டு கால்களை விரித்து வைத்தும் இதை செய்யலாம். முதலில் இடுப்பு தசைகளின் மீது கவனம் கொள்ளுங்கள்.இடுப்பு, பிறப்புறுப்பு, ஆசனவாய் ஆகியவற்றிற்கு அழுத்தம் கொடுங்கள். சிறுநீர் கழிப்பதைப் போல அவற்றைச் சுருக்கி கொண்டு, ஒரு வினாடி அதே நிலையில் இருந்துவிட்டு பின்னர் தசைகளை விடுவித்து ஓய்வெடுங்கள். தினமும் 15 முறை இதை செய்ய வேண்டும். நாள் ஆக ஆக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

மூன்றாம் பயிற்சி

இரண்டாம் பயிற்சியின் அட்வான்ஸ் லெவல்தான் இந்த பயிற்சி. இதில் பயிற்சியின் நேரத்தை கூட்டுவதே முக்கியம். முந்தைய பயிற்சியில் ஒரு நிமிடம் செய்ததை இதில் 3 முதல் 5 வினாடிகள் செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு மூன்று முதல் 4 தடவை இந்தப் பயிற்சியை செய்யலாம். ஒவ்வொரு தடவையும் 10 முறை பயிற்சிகளை செய்யவேண்டும். 

இதையும் படிங்க; sleeping direction: பணம் கொழிக்கணும் நிம்மதியா இருக்கணுமா? இந்த திசையில் தலைவெச்சு படுங்க!

click me!