உடலுறவின் போது ஆணுறை அணிவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே உள்ளன. முதல் காரணம் கருத்தரிக்காமல் இருப்பதற்கும், இரண்டாவது காரணம் பால்வினை நோய் பாதிப்பு எதுவும் வராமல் இருப்பதுமே ஆகும். பாலியல் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் தம்பதிகள் கருத்தரிப்பதை தடுப்பதற்கு ஆணுறைகளை பயன்படுத்துவது நல்ல தீர்வாக அமைகிறது. அதேபோன்று துணையுடன் மட்டுமில்லாமல் பல்வேறு நபர்களுடன் பாலியல் உறவு கொள்ளக்கூடிய நபரகளாக இருந்தால், அவர்கள் நிச்சயம் ஆணுறை அணிவது நல்லது. ஹெச்.ஐ.வி, எய்ட்ஸ், சிபிலிஸ், கோனோரியா, கிளைமிடியா, ஹெப்பிடைட்டிஸ் பி, ஹெப்பிடைட்டிஸ் சி, ஹெப்பிடைட்டிஸ் ஏ உள்ளிட்ட பால்வினை நோய் பாதிப்புகள் வராமல் இருக்கும். உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிடுவதாக பலரும் சமூகவலைதலங்களில் கவலை தெரிவிக்கின்றனர். அதன்படி கலவியில் ஈடுபடும் போது ஆணுறை கிழியாமல் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆயுட்காலம் முடிந்த ஆணுறைகள்
காலவதி தேதியை கடந்துவிட்ட ஆணுறையுடன் உடலுறவில் ஈடுபட்டால், அது உறுதியாக கிழிந்துவிடும். ஒருமுறை தயாரிக்கப்பட்ட ஆணுறைகளை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் பயன்படுத்துவது சரியாக இருக்கும். அது காலவதியாகிவிட்டால், ஆணுறையை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிதைந்து வலிமை இழந்துவிடும். அப்போது அதை பயன்படுத்தினால் நிச்சயம் கிழிந்துபோகும். நீங்கள் வாங்கும் ஆணுறைகள் உலர்ந்ததாகவோ, கடினமாகவோ அல்லது ஒட்டக்கூடியதாகவோ இருந்தால், அதை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம்.
கவனமுடன் கவரை பிரிக்க வேண்டும்
ஆணுறையை கவர் செய்துள்ள பிளாஸ்டிக் பொட்டலத்தை தவறாக கையாண்டால், ஆணுறை கிழிந்துவிடும் அபாயம் உள்ளது அதேபோன்று ஆணுறைக்கான பேக்கை வெட்டுவதற்கு பற்கள் அல்லது கத்தரிக்கோலை பயன்படுத்துவதும் ஆபத்து தான். பேக்கினுள் ஆணுறையை சற்று தள்ளினால் சில இடம் கிடைக்கும். அதை தேர்வு செய்து கவரை கிழிக்கவும். ஒருவேளை நீங்கள் மறந்து கவரை மறதியுடன் கையாண்டால் அவஸ்தை உங்களுக்குத்தான். இந்த வழிமுறையை முதன்முதலாக ஆணுறை அணிபவர்கள் மீற முடியாத கட்டளையாக பார்க்க வேண்டும்.
பாதுகாத்து வைக்க வேண்டும்
நாம் ஆணுறையை பத்திரப்படுத்தி வைக்கும் இடத்தை பொறுத்தும், அதனுடைய ஆயுட்காலம் முடிவு செய்யப்படுகிறது. சூடு நிறைந்த பகுதிகளிலோ அல்லது அதிக குளிர்ச்சியான பகுதிகளிலோ ஆணுறையை வைத்தால், அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் லேட்டஸ் என்கிற பொருள் வலிமையிழந்து போகும். அதனால் உங்களுடைய வாலட், காரின் கிளவ் கம்பார்ட்மண்ட், வெயில் நேரடியாக விழும் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆணுறையை வைக்கக்கூடாது. போதுமான வரை மிகவும் சாதாரண வானிலை நிலவும் பகுதியில் ஆணுறையை வையுங்கள். நைட் ஸ்டாண்டு, மருந்து வைக்கும் அலமாரி போன்றவை ஆணுறை வைக்க நல்ல இடங்களாகும்.
உடலுறவு மீதான வேட்கையை மட்டுப்படுத்தும் 5 மருந்துப் பழக்கங்கள்- இதோ பட்டியல்..!!
கூடுதல் உராய்வு
உடலுறவின் போது கூடுதலான உராய்வு ஏற்படுவதாலும் ஆணுறைகள் கிழிந்துவிடுகின்றன. உடலுறவின் போது நிதானத்தை கடைப்பிடிக்காமல், அவசரகதியில் செயல்பட்டால் ஆணுறை கிழிவது நிச்சயம். பொதுவாக இதுபோன்ற உடலுறவில் உங்களுடைய துணை முழுமையாக இன்பம் காண முடியாது. அப்போது அவருடைய உடலை இறுக்கத்தொடங்கும். அதன்காரணமாக இருவருடைய செயல்களிலும் வேகம் கூடும். அதனால் சீக்கரத்திலேயே உராய்வு அதிகரிக்கும். அதையடுத்து ஆணுறையில் விரிசல் ஏற்பட்டு கிழிந்துவிடும்.
தவறான லூப்ரிகண்டுகளை தேர்வு செய்வது
லேட்டஸ் கொண்ட ஆணுறையில் தவறான அல்லது அதற்கு பொருந்தாத லூப்ரிகண்டுகளை தடவினாலும் பாதிப்பு உங்களுக்குத்தான். பொருந்தாத லூப்ரிகண்டுகளால் லேட்டஸ் பொருள் தளர்ந்துபோகும். அப்போது அது செயல்பாட்டில் இருந்தால் பாதிக்கப்படும். அதற்காக தேங்காய் எண்ணெய், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தும் எண்ணெய் அல்லது ஏதோவொரு எண்ணெய் என்று பயன்படுத்தக் கூடாது. ஆணுறைகளுக்கு நீர் சார்ந்த லூப்ரிகண்டுகள் தான் சிறந்து. மேலும் சிலிக்கான் அல்லது ஹைப்ரிட் லூப்ரிகண்டுகளையும் பயன்படுத்துவது நல்ல தீர்வினை தரும்.