உடலுறவுக்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் உடலுறவுக்குப் பிறகு செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது. எப்போதுமே உடலுறவு என்பது சிலிர்ப்பூட்டக் கூடியது தான். அந்த உணர்வு எப்போது வேண்டுமானாலும் தோன்றக் கூடியதாகவே உள்ளது. பாலியல் உறவுக்கு முன்பு என்ன செய்யலாம் என்பது குறித்து நிறைய ஆலோசனைகள் பொதுவெளியில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் உடலுறவு முடிந்தவுடன் நாம் சில நடைமுறைகளை செய்வது உடல்நலனுக்கும் சுகாதாரத்துக்கும் மிகவும் நல்லது. இதுகுறித்த தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
உடலை கழுவ வேண்டும்
கலவி முடிந்ததும் உடனடியாக படுக்கையில் இருந்து எழுந்து குளிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் உடலுறவு முடிந்ததும், சிறிது நேரம் உங்களுடைய துணையுடன் நேரம் செலவழித்துவிட்டு உங்களை மெதுவாக சுத்தம் செய்து கொள்வது நல்லது. இந்தப் பழக்கம் சிறுநீர் பாதை வழியாக ஏற்படக்கூடிய தொற்றுநோய்களிலிருந்து ஆண்களையும் பெண்களையும் பாதுகாக்கும். உங்கள் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதை தொடர்ந்து உங்கள் பணிகளை வழக்கம் போல நீங்கள் தொடரலாம்.
சிறுநீரை வெளியேற்றுங்கள்
உடலுறவின் போது சிறுநீர் குழாய் வழியாக பாக்டீரியாக்கள் நுழையலாம். இதனால் தொற்றுநோய் பாதிப்புகள் வரக்கூடும். எனவே உடலுறவு முடிந்ததும் உடனடியாக சிறுநீர் வந்தால், அதை வெளியேற்றிவிடுங்கள். இதனால் கிருமிகள் உடலில் இருந்து வெளியேறிவிடும். அதையடுத்து உங்களுடைய துணையை சற்று நேரம் அரவணைத்து மகிழுங்கள். பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பு பகுதியை கழுவும் போது, முன்னிருந்து பின்பக்கம் செய்யுங்கள். இதனால் பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழையாது தடைபடும்.
ஒரு குவளை தண்ணீர் குடியுங்கள்
கலவி முடிந்ததும் சிறுநீர் கழிப்பது நல்ல பழக்கம் என்றால், அதையடுத்து தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு நன்மையை தரும். நீங்கள் ஹைட்ரேட்டாக உணரும் போது, அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிடும். கலவி முடிந்ததும் தண்ணீர் குடிப்பதால், சிறுநீர் குழாய் வழியாக ஏதேனும் பாக்டீரியாக்கள் உட்புகுந்திருந்தால் உடனடியாக வெளியே வந்துவிடும்.
உடலுறவு மீதான வேட்கையை மட்டுப்படுத்தும் 5 மருந்துப் பழக்கங்கள்- இதோ பட்டியல்..!!
தளர்வான உடைகளை அணியுங்கள்
உடலுறவு முடிந்ததும் உறங்கச் செல்கிறீர்கள் என்றால், மிகவும் தளர்வான உடைகளை அணிந்துகொள்ளுங்கள். சிலருக்கு பாலியல் உறவு முடிந்ததும் வியர்த்துக் கொட்டும். அதனால் தளர்வான உடைகள் அணியும் போது உடலுக்குள் காற்று புகும் வாய்ப்பு அதிகம். பெண்கள் மிகவும் இறுக்கமான பேன்டிஹோஸ், நூல் வடிவிலான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். ஆண்கள் பருத்தி உள்ளாடையை அணிவது சிறப்பு. அவை வியர்வையினால் ஏற்படும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.
கைகளை நன்றாக கழுவ வேண்டும்
உறவு முடிந்ததும் நீங்கள் குளிக்கவில்லை என்றால், கையை சுத்தமாக கழுவ வேண்டும். பிறப்புறுப்பு அமைந்துள்ள பகுதிகளில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். உடலுறவின் போது உங்களுடைய பிறப்புறுப்பை அல்லது உங்களது துணையின் பிறப்புறுப்பை நீங்கள் அதிகமாக தொடக்கூடிய சந்தர்ப்பம் நேரிடலாம். அதனால் எப்போதும் கலவி முடிந்ததும், கைகளை சுத்தமாக கழுவிடுங்கள். கண்டிப்பாக கைகளை சோப்பு போட்டுத் தான் கழுவ வேண்டும். இந்த வழக்கத்தை தவறாமல் கடைப்பிடிப்பது அவசியமாகும்.