உடலலுறவுக்கு முன் சுயஇன்பம் காண்பது சரியா?.. அதனால் ஏதும் பலன் உண்டா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

By Asianet Tamil  |  First Published Aug 21, 2023, 2:10 PM IST

கணவனும் மனைவியும் இணையும் முன்பாக, கணவனோ அல்லது மனைவியோ அல்லது இருவருமே சுயஇன்பம் கொள்வது எந்தவகையிலாவது நன்மை தருமா? இதை குறித்து மருத்துவர்கள் சொல்வது என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.


பொதுவாக சுய இன்பம் காண்பது என்பது ஒரு சில மன ரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை நீக்க உதவி புரியும் என்று மருத்துவர்கள் கூறினாலும், ஒரு கணவனும் மனைவியும் அவர்கள் உடலால் ஒன்றிணைவதற்கு முன்பாக சுய இன்பம் காண்பது எந்த வகையிலாவது பலனளிக்குமா? என்று கேட்டால் மருத்துவர்கள் சொல்வது "அதற்கான அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை" என்பதுதான்.

அதாவது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் முன்பாக, சுய இன்பத்தில் ஈடுபடுவதால் அவர்களுடைய உடலுறவில் நல்ல மாற்றங்களோ அல்லது கெட்ட மாற்றங்களோ ஏற்படும் என்பது குறித்த சரியான ஆய்வுகள் இதுவரை இல்லை.

Tap to resize

Latest Videos

பொது இடங்களில் பாத்ரூம் கதவுகளுக்கு கீழே ஏன் இடைவெளி உள்ளது தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

ஆனால் ஒரு சில சமயங்களில், குறிப்பாக இளம் தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கு முன்பாக சுய இன்பத்தில் ஈடுபடுவதால், அவர்கள் அதிக நேரம் உடலுறவை அனுபவிக்க முடியும் என்று சில ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. அதே நேரத்தில் நடுத்தர வயதில் உள்ள கணவன் மனைவி இந்த முறையை கையாள்வதால் அவர்கள் எளிதில் சோர்வடைந்து தங்கள் உடலுறவை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆகவே உடலுறவுக்கு முன்பான மேற்கொள்ளப்படும் சுய இன்பம் என்பது, உடலுறவு கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணின் வயதை பொருத்தது என்பதே ஆகும். உடலுறவுக்கு முன் சுயஇன்பம் செய்வது சிறந்த உறவுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நினைத்தால், அதை செய்யலாம், ஆனால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நினைத்தால் தயவு செய்து அதை செய்யவேண்டாம் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவர்களுக்கு தான் பாலியல் ஆசை அதிகம் இருக்குமாம்.. செக்ஸ் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்..

click me!