அந்த காலத்தில் எல்லாம் மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி அதை சாமி என்று அழைத்து வணங்கி வந்தனர். ஆனால் அதற்குள் சில அறிவியல் கரணங்கள் ஒளிந்து இருப்பதாக தற்காலத்தில் கூறப்படுவதை நாம் கேட்டிருப்போம்.
அப்படி மஞ்சள் குங்குமம் தடவி மரத்தை சாமி என்று பாதுகாத்து வர மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது, அந்த மரத்தை யாரும் வெட்டி விடக்கூடாது என்பதற்காக என்பது தான். காரணம் பல வகை மரங்களின் பட்டைகள் மனிதனுக்கு பெரும் ஆற்றலை தரக்கூடியது. அதிலும் குறிப்பாக கருங்காலி மரங்களின் பட்டைகள் ஒரு அருமருந்து.
இவற்றை லட்சுமியின் அம்சம் என்றே கூறுவார்களாம் காரணம் இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த மரத்தின் பட்டை மட்டும் அல்லாமல் வேர் மற்றும் இதிலிருந்து வெளியாகும் பிசினை கூட மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
undefined
துவர்ப்பு சுவை கொண்ட இந்த மரப் பட்டைகள் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்க்க வல்லது என்றும், நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்து என்றும் கூறப்படுகிறது. இந்த மரத்தின் பட்டையை சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் புண்கள் கூட ஆறிவிடுமாம்.
இது மட்டுமில்லாமல் ரத்தத்தில் உள்ள இரும்பு சத்து அதிகரிக்க உதவுகிறது கருங்காலி மர பிசின்கள். அந்த பிசின்களை பொடியாக்கி அதை பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் பலம் பெருகும், அது மட்டும் அல்ல ஆண்களுக்கு விந்து அதிகரிக்கவும் இந்த மரத்தின் பட்டை பெரிய அளவில் பயன்படுகின்றன. குறிப்பாக விந்து குறைபாடு உள்ள ஆண்களுக்கு அதை அதிகரிக்கவும், விந்தணுக்களின் கெட்டித் தன்மையை அதிகரிக்கவும் இந்த மரத்தின் பட்டைகள் பெரிய அளவில் பயன்படுகிறது.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த மர பட்டையை உட்கொள்வதனால் பேறுகாலத்தில் அவர்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மற்றும் பிற பிரச்சனைகளை நீக்கவும் இவை அதிக அளவில் பயன்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளையும் கெட்ட நீரையும் வெளியேற்றி உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது கருங்காலி.
அதேபோல கருங்காலி பட்டை, கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரை குடித்துவந்தால் சுவாச நோய்களும் கூட சரியாகும் என்று கூறப்படுகிறது. இயற்கை ஒரு அருமருந்து என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நீண்ட நேர உடலுறவு.. அதற்கென்று மாத்திரைகள் உட்கொள்வது சரியா? மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?