தேன்நிலவில் உடலுறவை தாண்டி பல விஷயங்கள் இருக்காம் - அதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க என்கிறார்கள் அறிஞர்கள்!
ஒரு புதுமண தம்பதிகள் திருமணம் ஆகி தேன்நிலவு செல்லும் பொழுது அந்த தேன்நிலவு முழுக்க அவர்கள் உடலுறவில் மட்டும்தான் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற தவறான எண்ணம் ஒரு சிலர் மத்தியில் ஆரம்ப காலம் முதல் இருந்து வருகின்றது.
உண்மையில் தேன் நிலவு என்பது என்ன? இந்த தேன் நிலவில் என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். புதுமண தம்பதிகள் தான் பொதுவாக இந்த தேன் நிலவிற்கு சென்று வருவார்கள்.
இந்த காலகட்டத்தில் ஒரு ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக இணைவதை தாண்டி மனரீதியாக அவர்கள் அதிக அளவில் இணைய வேண்டும். ஆகவே தேன் நிலவு செல்லும் தம்பதிகள் மலை பாங்கான அல்லது இயற்கை சூழல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வது மிகவும் நல்லது. இருவரும் கைகோர்த்தபடி சாலையில் வெகு தூரம் நடந்து சென்று அங்கிருக்கும் தேநீர் கடையில் தேநீர் பருகுவது மனதிற்கு இதமான அனுபவத்தை தரும்.
நீண்ட நேர உடலுறவு.. அதற்கென்று மாத்திரைகள் உட்கொள்வது சரியா? மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?
இந்த தேன்நிலவு காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக் கொள்வது மிக மிக அவசியம். திருமணத்திற்கு முன்பு அவர்கள் பழக பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைத்திருக்காது என்பதனால், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள இந்த தேன் நிலவை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இருவரும் ஒன்றிணைந்து நடனம் ஆடுவது, வெகு தூரம் நடந்து சென்று வந்த பிறகு ஒருவருக்கொருவர் கை கால்களை அமுக்கி விடுவது போன்ற உதவிகளை செய்து கொள்வது மனரீதியாக இருவரையும் மிக நெருக்கமாக கொண்டு வரும் என்கிறார்கள் அறிஞர்கள்.
உங்களுக்கு தேன்நிலவு செல்ல இரண்டு முதல் மூன்று நாட்கள் நேரம் கிடைக்கிறது என்றால் முதல் இரண்டு நாட்களை இயற்கையோடும் உங்களை அதிக அளவில் இணைத்துகொள்வதற்காகவும் செலவிடுங்கள். உங்கள் மன ஓட்டம் ஒன்றாக மாறிய பிறகு நிச்சயம் உங்களால் ஒரு நல்ல உடல் உறவில் ஈடுபட முடியும் அதுவே ஒரு சிறந்த தேன்நிலமாகவும் அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
'செவ்வாழை' சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா? சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்..!!