தென் ஆப்பிரிக்காவில் தண்ணீருக்கடியில் சுமார் 4 நிமிடம் 6 நொடிகள் முத்தம் கொடுத்து காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் கின்னஸ் சாதனை செய்துள்ளனர்.
முத்தம் என்பதும் ஒரு வகையான அன்பு வெளிப்பாடு. அதீத காதலை வெளிப்படுத்த காதலர்கள் அடிக்கடி முத்தமிடுகிறார்கள்.நேற்று காதலர் தினம் என்பதால் காதலர்கள் முத்த மழையை பொழிந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் மனதுக்கு இதமான முத்தத்தால் சாதனை செய்ய முடியும் என்றால் நம்புகிறீர்களா? கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றினாலும் உண்மைதான்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெத் நீல், கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் க்ளூட்டியர் இருவரும் தான் அந்த சாதனையை செய்துள்ளனர். இவர்கள் நான்கு நிமிடம் ஆறு வினாடிகள் வரை நீருக்கடியில் அழுத்தமான முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
கின்னஸ் சாதனை
காதலர் தினம் கொண்டாடும் காதலர்கள் சாக்லேட்டுகளையும், பரிசுகளையும் கொடுத்து கொள்வர். சிலர் கேக் வெட்டி கொண்டாடுவர். சிலர் டேட்டிங் செல்கிறார்கள். மனைவிகளுடன் நேரத்தை செலவிடும் நபர்களும் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் காதலர் தினத்தன்று ஒரு ஜோடி தண்ணீருக்கு அடியில் போய் முத்தம் கொடுத்துள்ளனர். அதுவும் 4 நிமிடம் 6 வினாடிகள் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டு கின்னஸ் சாதனையும் படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெற்றோர் அட்சதை தூவ திருமணம் செய்த திருநர் ஜோடி.. காதலர் தினத்தன்று கேரளாவில் ருசிகரம்!
கவனம் ஈர்த்த காதலர்கள்
பெத்தும், மைல்ஸும் இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுள்ளனர். இந்த சாதனையை செய்ய கடுமையாக பயிற்சியும் எடுத்துள்ளனர். இந்த பயிற்சியின் பலனாக இருவரும், 13 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளனர். அந்த சமயம் ஒரு இத்தாலி ஜோடி கிட்டத்தட்ட 3 நிமிடம் 24 வினாடிகள் முத்தமிட்டுக் கொண்டனர்.
தற்போது பெத், மைல்ஸ் ஜோடி முத்தத்தால் செய்த கின்னஸ் சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. சிலர் இது மிகவும் கடினமான டாஸ்க், இவர்கள் எப்படி சாத்தியப்படுத்தினார்கள் என ஆச்சர்யமும் படுகின்றனர். இந்த ஜோடியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இது முகம் என்றால் நம்ப முடியுதா?வாய் பிளக்க வைக்கும் உடல் ஓவியத்தால் இணைய உலகை தெறிக்கவிடும் மேக்கப் ஆர்டிஸ்ட்