Flipkart குடியரசு தின விற்பனை: எந்தெந்த போன்களுக்கு ஆஃபர்? எந்த கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட்?

First Published | Jan 11, 2025, 1:07 PM IST

ப்ளிப்கார்ட்டில் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13ம் தேதி முதல் தொடங்குகிறது. எந்தெந்த போன்களுக்கு அதிக ஆஃபர்? எந்தெந்த வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட்? என்பது குறித்து பார்ப்போம். 
 

Flipkart Republic Day Sale

குடியரசு தின சிறப்பு விற்பனை

ஆன்லைன் விற்பனை தளத்தில் முன்னணியில் உள்ள ப்ளிப்கார்ட்டில் (Flipkart) குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. Flipkart Plus and VIP சந்தாக்களை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 13ம் தேதி மதியம் 12 மணி முதல் சிறப்பு விற்பனை தொடங்குகிறது. மற்ற சாதாரண வாடிக்கையாளர்களுக்கு 14ம் தேதி முதல் சிறப்பு விற்பனை தொடங்கும்.

இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன்கள் உள்பட அனைத்து போன்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. iPhone 16 மாடலை ரூ.63,999க்கு வாங்கிக் கொள்ளலாம். இதேபோல் iPhone 16 Plusஐ ரூ.73,999க்கு வாங்கிக் கொள்ள முடியும். Samsung Galaxy S24 Plus மாடல் போனை ரூ.59,999க்கு வாங்கலாம். Vivo T3x போன் ரூ.10,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Discounts For Smartphones

எந்தெந்த போன்களுக்கு தள்ளுபடி?

ரியல்மி போன் மாடல்களை பொறுத்தவரை Realme P2 Pro மாடல் ரூ.17,999 என்ற விலையில் வாங்க கிடைக்கும். நத்திங் நிறுவனத்தின் NothingCMF Phon a 1 மாடலை ரூ.13,999க்கும், OPPO K12x மாடலை ரூ.12,999க்கும் வாங்கலாம். மோட்டோரோலா நிறுவனத்தின் போன்களை பார்த்தால் Moto G45 5G மாடல் ரூ.10,999க்கும், Moto G85 மாடலை ரூ.15,999க்கும், Moto Edge 50 Fusion மாடலை ரூ.19,999க்கும், Moto Edge 50 Pro மாடலை ரூ.27,999க்கும் தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

5.5G சேவை வந்தாச்சு! அசத்தும் ஜியோ; மின்னல் வேக இன்டர்நெட்; நொடிகளில் படங்கள் டவுன்லோடாகும்!

Tap to resize

Flipkart Special Sales

எந்தெந்த கிரெடிட் கார்டுகளுக்கு  டிஸ்கவுண்ட்?

ப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தி போன்களை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தி இஎம்ஐ மூலமாகவும் போன்கள் வாங்க முடியும். 

குடியரசு தின விற்பனையில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும். மேலும் ரூ.1,000 மதிப்புள்ள கிப்ட் வசுச்சர்களும் பெறலாம். இது தவிர பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி  இஎம்ஐ மூலமாகவும் போன்கள் வாங்கும் வசதியும் உள்ளது.
 

Smartphones

அதிரடியான ச‌லுகைகள் 

ப்ளிப்கார்ட் குடியரசு தின விற்பனை நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு அதிரடியான ச‌லுகைகள் வழங்கப்படுகிறன. ரூ.76க்கு பொருட்களை வாங்கும் வகையில் சலுகைகள் இருக்கின்றன. இது மட்டுமின்றி நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரை ரஷ் ஹவர் சலுகைகள் உள்ளன. இதில் தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும்.

இனி லேப்டாப் ஆர்டர் செய்தால் 10 நிமிடங்களில் டெலிவரி; பிளிங்கிட் சூப்பர் அறிவிப்பு!
 

Latest Videos

click me!