irfan
யூடியூப் வீடியோக்களில் கலக்கும் இர்பான்
பிரபல யுடியூப்பர் இர்பான் ஹோட்டல்களில் உணவு தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். தமிழகத்திலுள்ள youtube சேனல்களில் இவர் தான் அதிக அளவு வருமானத்தை ஈட்டி வருகிறார். இவரது கண்டெண்டுகள் சிறப்பாக இருக்கும், வெளிநாடுகளில் சென்று உணவு சாப்பிட்டு அந்த நாட்டின் உணவுகள் தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் அவரது சேனலை பின் தொடர்ந்து வருகின்றனர்.
சர்ச்சையிலை சிக்கும் இர்பான்
இர்பான் பிரபலமாக இருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கியும் வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கி பரபரப்பு ஏற்படுத்தினார் அப்போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவத்தில் இருந்து வெளியே வரவே மிகவும் சிரமப்பட்டு இருந்தார்.
irfan
இர்பான் மீது நடவடிக்கை
துபாய்க்கு தனது குடும்பத்தோடு சென்று இருந்தவர் குழந்தை பாலினம் தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். இதனை விழாவாகவும் கொண்டாடியிருந்தார். இந்த நிலையில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.