virat Kholi
ஒவ்வொரு அணிக்கும் சுமார் 120 கோடி ரூபாய் கொடுக்கப்படும், இந்த தொகையைக் கொண்டு அவர்கள் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பிரபல "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" (RCB) அணி ஏற்கனவே தங்களிடமிருந்த மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதில் விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கும், ராஜட் பட்டிதார் 11 கோடி ரூபாய்க்கு, யஷ் தயாள் 5 கோடி ரூபாய்க்கும் ஆர்.சி.பி அணியினால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
RCB
இந்நிலையில் தங்களிடம் மீதமிருந்த 83 கோடி ரூபாயில், தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கிரிக்கெட் வீரராக லியம் லிவிங்ஸ்டனை சுமார் 8.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருக்கிறது. 31 வயதாகும் லியான், இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் அணிக்காக போட்டியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
Yuzvendra Chahal
ஏலம் தற்பொழுது நடந்து வரும் நிலையில் அர்ஷ்தீப் சிங் 2 கோடி ரூபாய்க்கும். சிரேயாஸ் ஐயர் இரண்டு கோடி ரூபாய்க்கும், யுஸ்வேந்திர சாஹல் இரண்டு கோடி ரூபாய்க்கும் பஞ்சாப் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். மேலும் மிட்செல் ஸ்டார்க் இரண்டு கோடி ரூபாய்க்கும், கே.எல் ராகுல் 2 கோடி ரூபாய்க்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் – எத்தனை கோடி தெரியுமா?