உடலுறவுக்கு இடம், பொருள் கிடையாது
ஆண்களுக்கு இருக்கும் முதல் தவறான புரிதல், படுக்கையறைக்குள் மட்டுமே உடலுறவு ஏற்படும் என்பது தான். ஆனால் உண்மை அப்படி கிடையாது. பெண்களின் அந்தரங்க இச்சை அப்படியெல்லாம் வசதிகளை எதிர்பார்ப்பது கிடையாது. ஆண்கள் அதுகுறித்து பேச தொடங்கினாலே போதும், பெண்களுக்கு பற்றிக்கொள்ளும். படுக்கையறை என்றில்லாமல் வீட்டின் முகப்பு, சமையலறை, சாப்பிடும் இடம் என்று எங்கு வேண்டாலும் ‘அதை’ துவங்கலாம்.
பெண்களின் பொய் வாழ்க்கை
”உடலுறவு குறித்து எனக்கு தான் எல்லாம் தெரியும், என்னுடைய துணையின் தேவையையும் நான் அறிவேன்” என்கிற மனநிலை பொதுவாக ஆண்களிடம் அதிகம். ஆனால் உடலுறுவு குறித்த புரிதல் ஆண்களிடையே குறைவு தான் என்றபோதிலும், துணையின் தேவையை அவர்கள் பொருட்டாக கருதுவது கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இதன்காரணமாக உடலுறவின் போது, கணவனுக்கு வேண்டி பல்வேறு பெண்கள் உச்சநிலையை அடைந்துவிட்டதாக பொய்யாக காட்டுகின்றனர். இது அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்வது தான் மிகவும் சோகமானது. உடலுறவு குறித்து ஆணும் பெண்ணும் பேசாமல் இருப்பதும், மற்றொரு பிரச்னையாக இருக்கிறது.
புதுமையை தேடும் பெண்கள்
ஆண்கள் தங்களுடைய துணையை கவருவதற்கு, உறவு சார்ந்த பல்வேறு பாணியை பயிற்சித்துப் பார்ப்பார்கள். அவற்றில் ஏதேனும் ஒன்று துணைக்கு பிடித்துவிட்டது என்றால், அதை பாணியை தொடர்ந்து பின்பற்றுவார்கள். ஆனால் பெண்கள் உடலுறவு சார்ந்த தேவைகளில் புதுமையை விரும்புபவர்களாக உள்ளனர். இது ஆண்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திருமணத்துக்கு பிறகு கணவனிடம் எல்லாமே சொல்ல வேண்டுமா என்ன? பெண்களே உஷார்..!!
உடலுறவின் போது ஒரே பாணியை பின்பற்றும் கணவர்மார்கள் மீது பெண்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்பட்டு விடும். தங்களுடைய துணை, தங்களை கவருவதற்கு புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒருவேளை தனது செய்கையில் ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், தனது துணையிடம் ஆண்கள் கேட்டு தெரிந்துகொள்வது நல்ல நகர்வாக அமையும்.
உடலுறவு குறித்த புரிதல் மாற வேண்டும்
ஒரு ஆணும் பெண்ணும் இணை சேர்கையில், உடலுறவு மட்டும் முக்கியத்துவம் பெறுவதாக ஆண்கள் கருதுகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்பது வேறு. உடலுறவு தான் பிரதானம் என்றாலும் முத்த விளையாட்டு, முன் விளையாட்டு உடலை தாண்டி முக்கியத்துவம் பெறுகிறது.
Male Fertility Tips: ஆண்களின் விந்தணுக்களை மடமடவென அதிகரிக்க...சாப்பிட வேண்டிய பெஸ்ட் உணவுகள் இதுதான்..
இதுபோன்ற செயல்பாடுகளில் பெரும்பாலான பெண்களுக்கு ஆர்வம் அதிகம். மென்மையாக துவங்கிய உச்சநிலைக்கு செல்லும் உடலுறவு வாயிலாக, அந்நியோன்யம் அதிகரிக்கும் என்பது ஆய்வு கூறும் உண்மை. அதன்காரணமாக உடலை முக்கியத்துவப்படுத்தி சிந்திப்பதை நிறுத்துவது நன்கு புரிதலை தரும்.
அதிக தூண்டுதல் வேண்டும்
உடலுறவு சார்ந்த தேவைகளில், ஆண்களுக்கான தேவை என்பது மிகவும் குறைவு தான். பெண்களை திருப்திப்படுத்துவது என்பது சவால்களை கொண்டது. உடலுறவின் போது ஆண்கள் பலர், தங்களுடைய தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையாக கவனம் செலுத்துகின்றனர்.
Sex prediction: உங்கள் கருவில் உள்ளது ஆண் குழந்தையா.? பெண் குழந்தையா..?..சுலபமாக கண்டறிய அட்டகாசமான டிப்ஸ்..
பெண்களுக்கு கிளிட்டோரல் தூண்டுதலால் உச்சத்தை எட்ட வைப்பது மிகவும் பிடிக்கும் என்பது ஆய்வு கூறும் உண்மை. பெரும்பாலான ஆண்களுக்கு அது தெரிவதில்லை. இது மிகவும் உணர்திறன் கொண்ட பகுதி என்பதால், அதிக தூண்டுதல் இருக்க வேண்டும். இது சிறப்பாக அமையும் பட்சத்தில் தாம்பத்யத்தில் நெருக்கம் கூடும்,