அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷமா? நோய் எதிர்ப்பு சக்தியை குறைவா இருக்கும், இந்த ஆயுர்வேத குறிப்புகளை பாலோ பண்ணுங்க!

First Published Jan 27, 2023, 10:09 AM IST

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத டிப்ஸ்களை இங்கு காணலாம். 

குளிர்காலத்தில் மக்கள் தொற்றுநோய், பருவகால நோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்போது அவர் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அதை உருவாக்குவதற்கும் அதிகரிப்பதற்கும் ஆயுர்வேதம் கை கொடுக்கும்.  

செரிமானம் தான் முக்கியம்! 

நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க ஆயுர்வேதம் நாம் வலுவான செரிமான மண்டலத்தை பராமரிக்க வேண்டும் என கூறுகிறது. இதனால், நாம் உண்ணும் உணவு எளிதில் உறிஞ்சக்கூடிய ஊட்டச்சத்துக்களாகவும், எளிதில் வெளியேற்றக்கூடிய கழிவுகளாகவும் மாறுகிறது. ஜீரண நெருப்பு (digestive fire) 'அக்னி' என்றும் அழைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்து கொள்வது, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது, அல்லது தவறான உணவுகளை உண்பது நமது அக்னியைக் குறைக்கும். இது மோசமான செரிமானத்திற்கு வழிவகுக்கும்.

பலவீனமான செரிமானம், அமா எனப்படும் நச்சுகளை உடலில் குவிக்கிறது. இது உடல் நிலைகளை பாதித்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த, நமது செரிமான நெருப்பை தொடர்ந்து ஒளிர விட வேண்டும். அத்துடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளை உட்கொள்வதும் முக்கியம். அதில் சில உணவுகள் பின்வருமாறு: 

-நெல்லிக்காய்

-பேரிச்சை 

-தெளிந்த வெண்ணெய் அல்லது நெய்

- வெல்லம்

- துளசி இலைகள்

- மஞ்சள்

- இஞ்சி

துளசி, இலவங்கப்பட்டை, இஞ்சி, கிராம்பு, மஞ்சள், கீரை, கருப்பு மிளகு ஆகியவை கொண்டு தயார் செய்யும் காதா அல்லது மூலிகை தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இந்த மூலிகை கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலை நச்சுத்தன்மையில் இருந்து மீட்கிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சுவாசத்தை தொந்தரவு செய்யும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. வயதானதை மெதுவாக்குகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது. 

இதையும் படிங்க: தீராத நோய்களையும் தீர்க்கும் கடுகு வைத்தியம்!

நாஸ்யா சிகிச்சை 

இது ஒரு ஆயுர்வேத சிகிச்சையாகும். இது ஒரு சில துளிகள் நெய், எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை நாசிப் பாதையில் தடவுவது. ஆயுர்வேதத்தின்படி, ஐந்து பஞ்சகர்மா சிகிச்சைகளில் நாஸ்யாவும் ஒன்றாகும். இந்த சிகிச்சையை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுக்கலாம். வெறும் இந்த எண்ணெய்யை வயிற்றில் தடவலாம். ஒருவர் தலையை பின்னால் வைத்து படுத்து, ஒவ்வொரு நாசியிலும் 4-5 சொட்டு எண்ணெய் விட வேண்டும். இது நாசிப் பாதைகள் மற்றும் சைனஸை தெளிவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் பராமரிக்கிறது. 

ஆயில் புல்லிங் 

நமது வாய் நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்களுக்கு இருப்பிடம். அப்படி வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் நன்மை பயக்கும், சில உங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. ஆயுர்வேதத்தின் படி, எண்ணெய் இழுக்கும் சிகிச்சை இந்த தீய பாக்டீரியாக்களை அகற்ற உதவும். இது வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது அரிமேடாதி தைலம் ஆகியவற்றைக் கொண்டு ஆயில் புல்லிங் பயிற்சி செய்யலாம். 

இதையும் படிங்க: பூண்டு எனும் பொக்கிஷம்.. பாலில் பூண்டை வேக வைத்து அருந்தினால் கிடைக்கும் நன்மை தெரியுமா?

click me!