மாதவிலக்கு நாட்களில் நாப்கின் மென்ஸ்சுரல் கப் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சுகாதாரத்தை நாம் மேம்படுத்திக் கொள்வது தெரிந்த விஷயம் தான். ஆனால், சாதாரண நாட்களிலும் பெண்ணுறுப்பில் ஏதோ ஒரு திரவம் கசிவதை போல் நீங்கள் உணர்ந்தால், அதில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
பெண்ணுறுப்பில் அடிக்கடி கசிவு ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்றாகும். பெண்ணுறுப்பு தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வதற்காக இந்த திரவத்தை சுரக்கச் செய்கிறது. ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது நோய்த்தொற்று ஏற்பட்டு விடுகிறது. பூஞ்சை தொற்று ஏற்படுவதைப் போலவே கேண்டிடா என்ற வகை தொற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படக் கூடும். இதனை நீங்கள் சரியாக பராமரிக்க வில்லை என்றால், இந்த தொற்று ஏற்பட்டு உங்களுக்கு தொந்தரவு தரக் கூடும். எனவே, தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள்.
sanitary pad
பேன்ட்டி லைனர்கள்:
பெண்ணுறுப்பில் ஏற்படும் கசிவுகளை உறிஞ்சுவதற்கு நீங்கள் பேண்டி லைனர்கள் பயன்படுத்தலாம். வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்களும் இதனைப் பயன்படுத்தலாம். இதுவும் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் போன்ற தொற்று தடுப்பு பொருள் தான். ஒரு முறை பேன்ட்டி லைனரை உங்கள் உள்ளாடையில் பொருத்துகிறீர்கள் எனில், ஏழு மணி நேரம்வரை வைத்துக்கொள்ளலாம்.
பேன்ட்டி லைனர்கள் பயன்பாடு:
பெண்ணுறுப்பில் கசியும் திரவம் உங்கள் உள்ளாடைகளில் கறைகளை ஏற்படுத்தக் கூடும். ஆனால்,பேன்டி லைனர்களை பயன்படுத்தும்போது அவை அழுக்காவது தவிர்க்கப்படும். உங்கள் பெண்ணுறுப்புக்கும் அது பாதுகாப்பாக அமையும்.
பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் வியர்வையானது நோய் கிருமிகளை உண்டு பண்ணும். எனவே, நீங்கள் பேண்டி லைனர்களை பயன்படுத்தும் பட்சத்தில் அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
தினசரி பேன்டி லைனர்களை பயன்படுத்துவது சிலருக்கு அசௌகரியமாகத் தோன்றலாம். ஆனால், மாதவிலக்கு காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு ஓரிரு தினங்களுக்கு இதை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் மிகுந்த பாதுகாப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க..உடலில் சோர்வு நீங்கி, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க..இந்த ஒரு சூப் மட்டும் அடிக்கடி குடித்து பாருங்க போதும்..