தாம்பத்தியத்தில் ஈடுபட ஆண் உறுப்பு அளவு கூட முக்கியமில்ல.. ஆனா இந்த விஷயம் இல்லன்னா வேஸ்ட்!

First Published | Jan 30, 2023, 2:43 PM IST

ஆண் உறுப்பின் அளவை விட தாம்பத்தியத்துக்கு வேறு சில விஷயங்களும் முக்கியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு ஆண் உறுப்பு அளவு பெரிதாக இருக்க வேண்டும் என்ற கட்டுக்கதை நிலவி வருகிறது. ஆனால் அப்படியில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய ஆண் உறுப்பை கொண்டு பாலியல் உறவில் ஈடுபட முடியுமா என தயங்க வேண்டாம். உடலுறவில் ஈடுபட ஆண் உறுப்பு அளவு முக்கியம் அல்ல. உங்களுடைய பாலுறவு திறமையை ஆண் உறுப்பின் மூலம் அளவிட முடியாது. உங்களுக்கும் துணைக்கும் இன்பம் கொடுக்கும் அளவில் ஆண் உறுப்பு இருந்தால் அதுவே போதும். உடலுறவில் வேறு என்னென்ன முக்கியம் என்பதை இங்கு காணலாம். 

வாழ்க்கைத் துணையை திருப்திபடுத்த உங்களுடைய உதடுகளும், விரல்களும், நாக்கும் கூட போதும். ஆண் உறுப்பு மூன்றாம்பட்சம் தான். அது போலவே குறைந்த அளவு விந்து வெளியேற்றத்தை கூட நினைத்து பயப்பட தேவையில்லை. உங்களுக்கு வெளியேறும் விந்து திரவத்தில் எவ்வளவு விந்தணுக்கள் இருக்கின்றன? அதன் தரம் என்ன? அவை இயங்கும் தன்மை ஆகியவை முறையான மருத்துவ சோதனைகள் மூலம் கண்டறியப்படும். 

Tap to resize

உங்களுக்கு கருவுறுதல் பிரச்சனை ஏற்பட்டால் மட்டும் பரிசோதனைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன்பே உங்களுக்கு சந்தேகம், குழப்பம் இருந்தால் பாலியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். சில ஆண்களுக்கு எப்போதாவது விறைப்புத்தன்மை பிரச்சனை வரும். அதற்கு உடலுழைப்பு, மன அழுத்தம், புதியதாக உடலுறவு கொள்ளுதல், மதுவுக்கு பின் உடலுறவு போன்றவை காரணமாக இருக்கலாம். இந்த காரணங்களால் வரும் விறைப்புத்தன்மை பிரச்சனை தற்காலிகமானது. இது குறித்தும் கவலை கொள்ள வேண்டாம். 

ஒருவருக்கு தொடர்ச்சியாக விறைப்புத்தன்மை பிரச்சனை வந்தால் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இதற்கு நிச்சயம் மருத்துவரை அணுகுங்கள். இது ஒன்றும் குணப்படுத்தவே முடியாத சிக்கல் அல்ல என்பதால் பயம் வேண்டாம். 

இதையும் படிங்க: கணவரோடு உடலுறவில் திருப்தி அடையாத பெண்கள் இப்படி செய்வார்களா? அட கொடுமையே...

தாம்பத்தியத்தில் நல்ல இன்பம் பெற புகை, மது ஆகிய பழக்கம் இருந்தால் விட்டொழியுங்கள். உடல் எடை அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தூக்க மாத்திரை அல்லது போதை மாத்திரைகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை கட்டுக்குள் வைப்பதும் அவசியம். இந்த விஷயங்களை செய்தாலே தாம்பத்திய வாழ்வில் இன்பம் கிடைக்கும். 

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..

Latest Videos

click me!