சொல்லவே கூச்சப்படுற செக்ஸ் கனவுகள்... உங்களுக்கு வரும் அந்தக் கனவுகளுக்கு அர்த்தம் தெரியுமா?

First Published | Feb 10, 2023, 2:17 PM IST

பாலியல் உறவு தொடர்பான கனவுகள் குறித்த விளக்கங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

செக்ஸ் கனவுகள் உங்களுக்கு வருவது இயல்பானது. கனவுகளின் விதிப்படி அவை நம் ஆழ்மனதில் தேங்கியுள்ள ஆசைகளின் வெளிப்பாடாக இருக்கும். ஒவ்வொரு செக்ஸ் கனவுக்கும் ஒவ்வொரு மாதிரியான அர்த்தங்கள் உள்ளன. அது உங்களுடைய உணர்வுரீதியான பிரச்சனை அல்லது நீங்கள் பார்த்த ஏதாவது ஒன்றின் காரணமாக வந்திருக்கலாம். உங்களுடைய பாலியல் கனவுகள் அர்த்தம் இதோ.. 

நீங்கள் முன்னாள் காதலி/காதலன் கூட உடலுறவு கொள்வது போல் கனவு கண்டிருக்கலாம். அதற்கு அர்த்தம் தெரியுமா? இந்தக் கனவுகள் சிலருக்கு மீண்டும் மீண்டும் கூட வரலாம். இது உங்களுடைய தற்போதைய உறவில் திருப்தியாக இல்லை என்பதை குறிக்கிறது. இல்லையெனில் நீங்கள் புதிய துணையுடன் பழகுகிறீர்கள் அல்லது அந்த முன்னாள் துணையுடன் இருந்த அதே பிரச்சனைகளுடன் புதிய உறவில் இருக்கிறீர்கள் என பொருள். 

Tap to resize

உங்களுக்கு கனவில் வாய்வழி உடலுறவை கொள்வதோ, அனுபவிப்பதோ வந்தால் அதை நீங்கள் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்பது பொருள். வெளியே அந்த உறவை நீங்கள் கேலி செய்தாலும், உள்ளூர அந்த உறவை முயற்சி செய்ய விரும்புவீர்கள். அதுதான் கனவு வர காரணம். 

பிடிஎஸ்எம் (BDSM) உறவு கேள்விபட்டிருப்பீர்கள். அந்த மாதிரியான கனவு வருவதற்கு பெற்றோர் காரணமாக இருக்கலாம். ஒருவரின் குழந்தைப்பருவம் மோசமாக இருந்தால் இந்த கனவுகள் வரும். இதனால் உங்களுக்கு மற்றவரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆசை அல்லது மற்றவர்களும் உங்களுக்கு அவ்வாறே செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். சுருங்கச் சொன்னால் சித்திரவதை செய்து அந்த வலிகளில் அனுபவிக்கும் இன்பம் தான் பிடிஎஸ்எம். 

உங்களுடைய ஆசிரியர் அல்லது மாணவரைப் பற்றி உங்களுக்கு கனவு வந்தால் கொஞ்சம் கவனம். உங்களுக்கு பெற்றோரின் கவனம் கிடைக்காமல் சுயமோகியாக மாறிவிட்டீர்கள் என்பது அர்த்தம். அதனால் அதிகாரம் படைத்த ஒருவரால் முழுமையாக நேசிக்கப்படுவது மாதிரியான உணர்வைப் பற்றி நீங்கள் எப்போதும் கற்பனை செய்யலாம். 

முகம் தெரியாத நபர்களுடன் உறவு கொள்வது மாதிரியான கனவு வருகிறதா? குற்றவுணர்ச்சி வேண்டாம். உங்களுடைய பாலியல் ஆர்வம் காரணமாக இது மாதிரியான கனவுகள் வரலாம். மனதை அலைபாயாமல் பார்த்து கொள்ள உங்கள் துணையுடன் போதிய நேரம் செலவிடுங்கள். கனவுகள் சில நேரங்களில் வெற்று கற்பனைகளாக இருக்கலாம். புரிந்து கொண்டு நலம் வாழுங்கள்.  

இதையும் படிங்க: இனிக்க இனிக்க தாம்பத்தியம்! கொஞ்சம் தேன் போதும்.. இப்படி செய்தால் பகல்ல கூட உங்க ஞாபகம் இருக்கும்!!

இதையும் படிங்க: ஆண் நினைத்தால் தாய் , மகள் இருவருடனும் உறவு வைக்கலாம், பெண்களை அடிமைப்படுத்த கேவலமா ரூல்ஸ் போட்ட ஐஎஸ்ஐஎஸ்

Latest Videos

click me!