கணவன் மனைவி இந்த 3 விஷயங்களை பண்ணிட்டா போதும்.. கடவுளே வந்தாலும் அவங்கள பிரிக்க முடியாது!!

First Published | Jun 7, 2023, 5:07 PM IST

கணவன் மனைவி உறவு வலுவாக இருக்க அவர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கு காணலாம். 

கணவன் மனைவி உறவு நன்றாக இல்லாவிட்டால் மூன்றாம் நபர் வந்து எளிமையாக கோல் போட்டுவிடுவார். பல நேரங்களில் ஒரு நபர் இந்த உறவை சிறிய தவறுகளால் உடைக்கிறார். பல நேரங்களில் உறவுகள் விருப்பமின்மையால் சிதைந்து விடுகிறது. சில சமயங்களில் இருவருக்கிடையே எந்தத் தவறும் இல்லாவிட்டாலும் இடைவெளி விரிவடைந்து கொண்டே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உறவுகளுக்கான அத்தியாவசிய மற்றும் அடிப்படை விஷயங்களை நாம் அனைவரும் அறிந்திருப்பது முக்கியம். இதன் காரணமாக எந்தவொரு உறவும் வலுவாக இருக்கும். கணவன், மனைவி உறவில் அடித்தளமான மூன்று விஷயங்களை இங்கு காணலாம். 

சந்தேகம்:

எந்தவொரு உறவிலு சந்தேகம் மிகவும் ஆபத்தானது. மேலும் அது உறவு முறிவிற்கு காரணமாகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், சந்தேகம் கொண்டு பிரச்சினை செய்வதற்கு பதில், உங்கள் துணையிடம் நேரடியாகப் பேசி, உங்கள் உறவை முறியாமல் காப்பாற்றிக் கொள்வது நல்லது. எப்போதும் உறவில் மூன்றாம் நபர் தலையிட்டால் சண்டை செய்ய வேண்டாம். உங்கள் துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 


நம்பிக்கை: 

எந்தவொரு உறவிலும் இரண்டாவது முக்கியமான விஷயம் நம்பிக்கை. உறவில் நம்பிக்கை தான் அடித்தளம். ஒரு வலுவான உறவுக்கு தம்பதி இருவரிடமிருந்தும் நம்பிக்கை தேவை. ஒருவரையொருவர் நம்புவது ஆயுளுக்கும் சண்டை வராமல் பார்த்து கொள்ளும். ஒருவருக்கொருவர் இருக்கும் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: Anxiety and Sex: கவலைப்பட்டா செக்ஸ் வாழ்க்கை பாதிக்குமா? எப்படி அதை சரி செய்யலாம்?

புரிதல்: 

உறவில் புரிதல் இல்லாவிட்டால் விரைவில் இடைவெளி உருவாகும். உங்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் துணையின் உதவியை நாடுங்கள். புரிதல் என்பது உங்களுடைய ​உறவில் முக்கியமில்லாத விஷயங்களை பெரிதாக மாற்ற வேண்டாம் என்ற ஞானத்தை உங்களுக்கு கொடுக்கும். உங்கள் துணையின் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள். அப்போது விஷயங்கள் எளிமையாகும். 

இதையும் படிங்க: உடலுறவில் தடையில்லாமல் இன்பம் பெற தம்பதிகள் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யணும்! மீறினா ஆணுறுப்பு சுருங்கிடும்

Latest Videos

click me!