செக்ஸ் உறவுக்கு முன்னும், பின்னும் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் செய்யக்கூடாதாம்!!

First Published | Apr 7, 2023, 7:14 PM IST

அடிக்கடி உடலுறவு கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி உடலுறவு கொள்ளும் முன்பும், பின்பும் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. 

உடலுறவு மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவும் அற்புதமான விஷயம். உங்கள் துணையுடன் அதிக பிணைப்புடன் இருப்பதால் உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஆனால் உடலுறவுக்காக செய்யும் சில மெனக்கெடல்கள் ஆபத்தை தரும் தெரியுமா? 

உடலுறவுக்கு தயாராகும் பெண்கள் பிறப்புறுப்பில் இருக்கும் முடிகளை அகற்றுவதை விரும்புவார்கள். தன் துணைக்கு கவர்ச்சியாக தோற்றம் அளிக்க விருமுகிறார்கள். இதற்காக முன்கூட்டியே முடிகளை அகற்றுவதில் தவறு இல்லை. ஆனால் உடலுறவு கொள்வதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு பிறப்புறுப்பில் முடிகளை அகற்றுவது சரியான முடிவல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும். இதனல் பிறப்புறுப்ப எரிச்சல் ஏற்படலாம். 

Tap to resize

குடித்துவிட்டு உடலுறவில் ஈடுபடக்கூடாது. உடலுறவு கொள்வதற்கு முன்பு அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் அதிக இன்பம் காணமுடியும். சில ஆண்களின் விறைப்பு கோளாறுக்கு அதிகமான மது அருந்துதல் ஒரு காரணம். 

உடலுறவுக்கு முன் உண்ணக் கூடாதவை!  

உடலுறவு கொள்வதற்கு முன்பாக காரமான உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. நெஞ்செரிச்சலை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடுவது முற்றிலும் தவறு. வறுத்த கோழி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், கூல்ட்ரிங்ஸ், காபி ஆகியவை நெஞ்செரிச்சலை உண்டாக்கலாம். அதனால் உடலுறவுக்கு முன்னரும், பின்னரும் இந்த உணவுகளை எடுத்து கொள்ளாதீர்கள். எதைத்தான் சாப்பிடுவது என நினைக்கிறீர்களா? உடலுறவுக்கு முன்பு வாழைப்பழம், ஓட்ஸ், ஆப்பிள் ஆகிய எளிய உணவுகளை உண்ணலாம். 

உடலுறவு வைத்து கொண்ட பின்னர் உடனே சிறுநீர் கழிப்பது ரொம்ப நல்ல விஷயம். பிறப்புறுப்பு பகுதியில் தொற்றுக்கள் ஏதும் பரவாமல் பாதுகாக்கும். உடலுறவு முடிந்த பிறகு வெறும் கையால் பிறப்புறுப்பை தொடக் கூடாது. பிறப்புறுப்பை சுத்தமாக கழுவுவது அவசியம். அதற்காக அந்தரங்க உறுப்பை வாசனை திரவியங்கள் கலந்த லிக்விட் அல்லது சோப்பு ஆகியவை கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. சாதாரண தண்ணீரில் பிறப்புறுப்பை கழுவினால் போதும். 

இதையும் படிங்க: வயது மூத்த ஆண்களை திருமணம் செய்வதால் என்ன ஆகும் தெரியுமா?பெண்களின் பகீர் அனுபவங்கள்! இப்ப யோசிச்சு என்ன செய்ய!

உடலுறவில் ஈடுபடும் போது உடல் திரங்கள் வெளியேறுவதால் உள்ளாடைகள் இறுக்கமாக அணிவது நல்லதல்ல. உடலுறவுக்கு பிறகு இறுக்கமன உள்ளாடைகள் அல்லது இறுக்கமான உடைகளை தவிருங்கள். மேலும், உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்கும் சமயங்களில் தொளதொளவென இருக்கும் உடைகளை உடுத்துங்கள். அது கவர்ச்சியாக இருக்கும். உண்மையில் ஆடையின்றி இருப்பது நல்லது. அது நெருக்கத்தை அதிகமாக்கும். 

இதையும் படிங்க: Sexting: அந்தரங்கமா மெசேஜ் அனுப்பும்போது என்ன செய்யணும்? எதை மறந்தும் செய்யக் கூடாது தெரியுமா?

Latest Videos

click me!