Sexting: அந்தரங்கமா மெசேஜ் அனுப்பும்போது என்ன செய்யணும்? எதை மறந்தும் செய்யக் கூடாது தெரியுமா?
அந்தரங்கமான மெசேஜ்களை பறக்க விடும்போது எந்தெந்த விஷயங்களை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
காதலர்களால் எப்போதும் நேரில் சந்தித்து கொள்ள முடியாது என்பதால் தங்களுடைய உணர்வுகளை மெசேஜில் தான் கொட்டி கொள்வார்கள். வெறும் மெசேஜ் அல்ல கொஞ்சம் அந்தரங்கமான மெசேஜுகளை தான் செக்ஸ்டிங் (sexting) என்கிறோம். இது அந்த நேரத்தில் குளுமையான உணர்வுகளை தூண்டிவிடும். ஈர்ப்பை அதிகரிக்கும். ஆனால் யாருக்கு எப்படி மெசேஜ் செய்ய வேண்டும் என்கிற விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நபரிடம் நெருங்கி பழகி அந்தரங்கமாக பேசும்போது அவர் நம்பிக்கைக்கு உரியவரா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து கொள்ள வேண்டும். காதலிக்கவே செய்தாலும் அவரை கண்மூடித்தனமாக நம்பாமல் கொஞ்சம் யோசித்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்புணர்வு!
நீங்கள் ரொமான்டிக்காகவும் ரொம்ப நெருக்கமாகவும் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கடந்து அந்த நபருடன் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறீர்கள் என்பதும் முக்கியம். நீங்கள் அனுப்பும் மெசேஜ் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் அந்தரங்கமான மெசேஜ் உங்களுக்கு எதிராகவும் திரும்பலாம். உங்களுடைய போனிலும் அந்த மெசேஜ்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம். ஏனென்றால் மனிதர்களுடைய அந்தரங்க உரிமை இப்போது கேள்விக்குறியாகி வருகிறது. பாதுகாப்பாக இருக்க முடியாவிட்டால் அதை செய்யாமலே இருங்கள். பின்னர் வருத்தப்படாமல் இருப்பீர்கள்.
லிமிட்!
எப்போதும் உங்களுக்கு ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள். எதிரில் இருக்கும் நபர் பேசும் விஷயங்களை கவனமாக ஆராய்ந்து பதில் அனுப்புங்கள். உங்களுடைய எல்லையை எப்போதும் கடந்து விடாதீர்கள். பாதுகாப்புணர்வும் நம்பிக்கையும் இல்லாத நபர்களிடத்தில் எல்லை மீறாதீர்கள். அந்தரங்க விஷயங்களில் வெறும் வார்த்தைகள் இல்லாமல் அழகுணர்ச்சி கலந்து ரொமாண்டிக்காக பேசினால் உங்கள் துணை உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்.
புதிய நபரிடம் கவனம்!
புது நபரிடம் பேசும் போது புதுமையாகவும், ஆர்வமும் அதிகமாக இருக்கும். ஆனால் அவர்களுடைய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அவருடைய பிரச்சனையை தீர்ப்பது, சரி செய்வது என ஆரம்பத்தில் வாக்குறுதிகளை அள்ளி தெளிக்காதீர்கள். இரக்க குணத்தில் அவருக்கு மீட்பராக மாற வேண்டும் என செயல்பட வேண்டாம். உங்களுக்கு எதிரில் உங்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்கள் சரியாக ஒத்துழைக்காவிட்டால், அவர்களுக்கான நேரத்தை இடைவெளியை கொடுக்க வேண்டும். ஓய்வு நேரத்தில் பேச சொல்லி விட்டு விலக வேண்டும். அதற்கு பதிலாக அவர்களுடைய சுமையை சுமப்பதாக சொல்லி அந்த உறவை சிக்கலாக்கிக் கொள்ளக்கூடாது. பொறுமையாக தான் ஒருவர் அந்தரங்கத்தில் நுழைய வேண்டும். அதுவும் அவர் அனுமதித்தால் மட்டுமே!
போதையே!!
செக்ஸ்டிங்கில் ஈடுபடுபவர்கள் போதையில் செய்வதை முதலில் தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டு என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் தன் முன்னாள் காதலி அல்லது இன்னாள் காதலிக்கு அழைத்து ஏழரையை கூட்டுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். இப்படி செய்தால் உங்கள் துணைக்கு எரிச்சல் அல்லது நம்பிக்கையின்மை வரலாம்.
இதையும் படிங்க: உங்க செக்ஸ் வாழ்க்கையில் சலிப்பு வருதா? இதையெல்லாம் உடனே மாத்துங்க! உங்க துணைக்கு உடலுறவில் ஆர்வம் வரும்!!
நன்கு அறிமுகம் இல்லாத நபர்கள்
உங்களிடம் யாராவது ப்ரபோஸ் செய்திருக்கலாம் அல்லது நீங்கள் புதிய நபருடன் டேட்டிங் சென்றிருக்கலாம். அந்த நபரை குறித்து முழுமையாக தெரியாமல் ரொமாண்டிக் மெசேஜ் அல்லது செக்ஸ்டிங் செய்யக் கூடாது. சிக்கல் வரலாம்.
கெஞ்ச வைக்காதீங்க!
ரொமான்டிக்கான மெசேஜ் செய்வதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி அப்போது துணையுடன் பேசுவது சரியாக இருக்கும். வேறு வேலையில் ஈடுபட்டுக் கொண்டு மெசேஜ் செய்தீர்கள் என்றால், உங்களுடைய துணை தொடர்ந்து ரொமாண்டிக்காக பேசிக் கொண்டிருப்பார். ஆனால் உங்களால் கவனம் செலுத்த முடியாது. இதனால் அந்த உறவில் விரிசல் வரலாம். ஓய்வாக இருக்கும் நேரத்தில் மட்டுமே செக்ஸ்டிங் அல்லது ரொமான்டிக் மெசேஜ் செய்வது உறவை பலப்படுத்தும். இனிமையையும் கொடுக்கும்.
இதையும் படிங்க: வயது மூத்த ஆண்களை திருமணம் செய்வதால் என்ன ஆகும் தெரியுமா?பெண்களின் பகீர் அனுபவங்கள்! இப்ப யோசிச்சு என்ன செய்ய!