பெண்கள் உங்களுக்கு ஏன் துரோகம் செய்கிறார்கள் தெரியுமா? இப்படி இருந்தா அவங்களுக்கு சரிபட்டு வராதாம்...

First Published | Jan 31, 2023, 5:09 PM IST

பெண்கள் உறவில் ஏமாற்றுவதற்கான காரணங்களில் சிலவற்றை இங்கு காணலாம். 

இருவர் இணைந்து வாழும்போது ஏதோ ஒருகட்டத்தில் ஏமாற்று வேலை தலைதூக்குகிறது. முன்பு இதற்காக ஆண்கள் மீது மட்டும் பழி சுமத்தப்பட்டது. தற்போது பெண்களும் அந்த வரிசையில் இடம் பிடித்து வருகின்றனர். ஆண்களை போலவே பெண்கள் ஏமாற்றுவதற்கான காரணங்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம். 

போதிய அன்பு இல்லாமை

தங்களுடைய துணையிடம் போதுமான கவனமோ, அன்போ கிடைக்காத பெண்கள் ஏமாற்றுகிறார்கள். போதிய அன்பு, புரிதல் இல்லாமை, கவனிப்பு இல்லாமல் போகும்போது, காதல் உறவில் இருந்து பின்வாங்குகிறாள். இப்படியாக வேறு ஒருவருடன் பாலியல்ரீதியாகவோ, உணர்வுகளின் அடிப்படையில் நட்பாகவோ தொடர்பு ஏற்படுகிறது. 


பாலியல் ஆசை இல்லாமை 

தங்கள் துணையிடம் பாலியல் ரீதியாக ஈர்ப்பு இல்லாமல் இருக்கும்போது சில பெண்கள் ஏமாற்றுகிறார்கள். ஒரு பெண்ணின் பாலியல் ஆசையை புரிந்து கொள்ளாத போதும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத போதும் சிலர் ஏமாற்ற துணிகிறார்கள். பெண்கள் தங்கள் தற்போதைய உறவில் பெறாத பலவிதமான பாலியில் விருப்பங்களை வேறொரு உறவில் பெற முயற்சி செய்யலாம். 

உறவுகளில் சிக்கிய உணர்வு

பொசசிவ், சுதந்திரமாக உணரவிடாத கட்டுப்பாடுகளால் தாங்கள் சிக்கியதாக உணரும் பெண்கள் உறவுகளிலிருந்து வெளியேறும் எண்ணம் கொள்கிறார்கள். விவரிக்க முடியாத ஆசையும், விடுதலை பெறும் முனைப்பும் பெறுகிறார்கள். தங்களை தகுதியற்றவர்களாக உணரவைக்கும் ஒரு துணையுடன் இருக்க பெண்கள் விரும்பவில்லை. தனிமை, சிறையில் சிக்குண்ட உணர்வு தான் பெண்களை உறவுக்கு வெளியே அன்பையும் அக்கறையையும் தேட தூண்டுகிறது. 

தங்கள் கணவர்/ காதலனுடன் உடலுறவு கொண்டாலும், அவரோடு எந்நேரமும் இருந்தாலும் கூட தாங்கள் பதிலுக்கு நேசிக்கப்படவில்லை என்ற உணர்வை கொண்டிருக்கும் பெண்கள் வேறொரு துணையிடம் திரும்புகிறார்கள். நேசிக்கப்படுதலும், நேசிக்கப்படுவதை உணர்த்துவதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதை ஆண்கள் செய்யாவிடில் அந்த உறவு ஆட்டம் காணுகிறது. இது பெண்களுக்கும் பொருந்தும். 

இதையும் படிங்க: முதலிரவு ரகசியத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டணும், ராஜஸ்தானில் பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் சடங்கு

இதையும் படிங்க: கர்ப்பிணியின் முகம் பிரகாசமாக இருந்தால் கட்டாயம் பெண் குழந்தை தான் பிறக்குமா? உண்மை பின்னணி என்ன?

Latest Videos

click me!